- ஸ்வர்ணலட்சுமி
மார்ச் 10ஆம் தேதி 20 25 திங்கட்கிழமை மாசி 26, அன்று ஏகாதசி திதியும் சேர்ந்து வருவது மிகச் சிறப்பானதாகும்.
நேரம் :காலை 7:48 மணி வரை ஏகாதசி திதி உள்ளது பிறகு 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 8:16 மணி வரை துவாதசி திதி உள்ளது. இன்று வரும் ஏகாதசி திதி 'ஆமலகி ஏகாதசி 'என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் வரும் ஏகாதசி தினம் ஆமலகி ஏகாதசி தினமாகும்.
அமலகி ஏகாதசி என்பது ஆம்லா என்று கூறப்படும் பெரிய நெல்லிக்கனி சம்பந்தப்பட்டதாகும் .இந்த ஆம்லா மரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏகாதசி திதி 'அமலகி ஏகாதசி 'என்று அழைக்கப்படுகிறது.

சிறப்பு :ஏகாதசி நன்னாளில் விஷ்ணு பகவான் நெல்லிக்கனி மரத்தில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது. புராணங்களில் இது தொடர்பான ஏராளமான கதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாவிஷ்ணுவின் திருவுருவமாக இந்த நெல்லி மரத்தை கருதப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் நெல்லிக்கனி மரத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
நாள் முழுதும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதால் ,ஆன்மீக முன்னேற்றம் ,மன அமைதி ,பாவங்கள் நீங்கி மோட்சம் பெறுவர் என்ற நம்பிக்கையுடன் விரத முறை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள் ஹோலி பண்டிகையின் வண்ணமயமான கொண்டாட்டங்களில் தொடக்கத்தை குறிக்கிறது.
நெல்லி மரத்தை வழிபடுவது நல்ல ஆரோக்கியம் ,நீள் ஆயுள், நிறை செல்வம் கிடைக்கும் என்று பக்தர்கள் ஏகாதசி விரதம் கடை பிடிக்கின்றனர் .நெல்லி மரத்திற்கு பல காணிக்கைகளை செலுத்துவார்கள். மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதங்களை பெற பிரார்த்தனைகள் செய்கின்றனர் .நெல்லி மரத்திற்கு பூஜை செய்து கதைகள் ,கீர்த்தனைகள், பாடி வழிபாடு செய்வர்.
செவ்வாய்க்கிழமை மார்ச் 11ஆம் தேதி பிரதோஷ தினத்திற்கு முதல் நாள் துவாதசி திதியானது ஸ்ரீ சுவர்ணலட்சுமி (பொன்மகள்) தோன்றிய தினமாகும். இந்நாளில் விஷ்ணு மூர்த்திகள் தோன்றி அருளுகின்றனர். திருமகளுடன் ஸ்ரீ நரசிம்மர் தோன்றி அருளினார் என்று கூறப்படுகிறது. ஆதிலட்சுமி நரசிம்ம துவாதசியாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு முழு தாமரை மலர் மாலைகளை சாற்றி பூஜிப்பது அதீத சிறப்பு .பானகம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் படைத்து அன்னதானம் செய்தல் மிகச் சிறப்பானதாகும்.
இவ்வாறு ஏகாதசி விரதமும் ,துவாதசி லட்சுமி வழிபாடு செய்யவும் ஏற்ற நாள்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}