- ஸ்வர்ணலட்சுமி
பௌம பிரதோஷம்.. இன்றைய பிரதோஷம் பெளம பிரதோஷமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை ஆன இன்று அமைந்துள்ள பிரதோஷம் "பௌம பிரதோஷம் " என்று அழைக்கப்படுகிறது.
பிரதோஷம் சிவபெருமானையும் அவரது வாகனமான நந்தியையும் வழிபடும் மிகவும் மங்களகரமான நாள் இன்று .விசுவா வசு வருடம் 20 25 ஜூலை 22ஆம் தேதி ஆடி மாதம் ஆறாம் நாள் செவ்வாய்க்கிழமையான இன்று மாலை பிரதோஷ வழிபாடு அனைத்து சிவன் கோயில்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.
பிரதோஷ நாளில் தியானிக்க வேண்டிய சக்தி வாய்ந்த சிவ மந்திரங்கள்: "மகா மிருத்தியுஞ்சய மந்திரம்": ஓம் த்ரயம்பகம் யஜாமகே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர் வாருகமிவ பந்தனான் ம் ருத்யோர் முக்ஷிய மாம்ரூதாத்"
நீலகண்ட மகாதேவ மந்திரம் :"ஓம் நமோ நீலகண்டாய"

பிரதோஷ நாளில் சிவ பெருமானுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரிப்பதும், தியானிப்பதும் பிரபஞ்சத்துடன் ஆன தெய்வீக ஆற்றலுடன் சக்தி வாய்ந்த இணைப்பை நமக்கு ஏற்படுத்த உதவும். இந்த புனிதமான மந்திரங்களை உச்சரிப்பதனால் மனதெளிவு ஏற்படும். நோய்கள் நீங்கும். இதன் அதிர்வுகளால் ஆத்மாவில் நேர்மறை ஆற்றல்கள் பரவும் .சிவபெருமானின் அருள் கிடைக்கும். வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மேலும் அதிர்ஷ்டம் ,செல்வ செழிப்பு, வெற்றி முதலியனவற்றை கொண்டு வரும் . எதிர்மறை ஆற்றல்களை தடுத்து ,பாதுகாப்பு உணர்வையும் நேர்மறை ஆற்றல்களையும் பெருக்கும்.
நேரம்: கிருஷ்ணபக்ஷத்யோதசி திதி நேரம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 :41 முதல் 23ஆம் தேதி 4:43 வரை உள்ளது.
பிரதோஷ நாளான இன்று ஆழ்ந்த குழி போன்ற துன்ப வினைகளில் அகப்பட்டு தவிக்கும் ஆழமான பிறவி பந்தம் கட்டுண்ட நாம் அதிலிருந்து கரையேறி மீண்டு வருவதற்காக வழி ஒன்றை காட்டி அருள ஆதி அந்தமில்லா நாயகன் பிரதோஷ நாயகன் சிவபெருமானை போற்றி வணங்கும் நாள்.
சிவன் கோவில்களில் மாலை அந்தி நேரத்தில் பிரதோஷ காலம் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னும் தோராயமாக 1:30 நேரம் அதாவது மாலை 4:30மணி முதல் 6:30 மணி வரை பிரதோஷ பூஜை நடைபெறுகிறது.
பிரதோஷத்தின் போது ஸ்ரீ ருத்ர அபிஷேகம் பூஜைகள், சிவபெருமான் மற்றும் ஸ்ரீ நந்தி தேவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனைகள் செய்யப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் பௌம பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட பாவங்கள் நீங்கி ,கிரக தோஷங்கள் நீங்கி ,பண சிக்கல்கள் உடல் நலப் பிரச்சினைகள் நீங்கி அனைத்து வளங்களும், நலங்களும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு வழிபாடுகள் செய்வதினால் சிவனின் அருள் எப்பொழுதும் நம்முடன் இருப்பதை உணர முடியும். சிவபெருமானுடன் நெருக்கமாக இருக்கும் உணர்வையும் ,ஆன்மீக ஞானத்தையும், வளர்ச்சியையும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறனையும் ,ஒழுக்கமான நெறிமுறை வாழ்க்கையையும், பின்பற்றி வாழலாம். மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}