- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: குரு பிரதோஷ விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மாத சிவராத்திரியும் பிரதோஷமும் ஒரே நாளில் ஒன்று இணைந்து வருவதால் இந்நாள் குரு பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது.
குரு பிரதோஷ விரதம்:

ஓம் காசி லிங்கமே போற்றி!
ஓம் குரு லிங்கமே போற்றி!
ஓம் கேதார லிங்கமே போற்றி !
ஓம் கைலாச லிங்கமே போற்றி!
ஓம் கோடிலிங்கமே போற்றி !
ஓம் சக்தி லிங்கமே போற்றி!
ஓம் சாந்தலிங்கமே போற்றி!
ஓம் தியானலிங்கமே போற்றி!
ஓம் சுயம்புலிங்கமே போற்றி !
ஓம் ஸ்வர்ணலிங்கமே போற்றி !
ஓம் சுந்தரலிங்கமே போற்றி!
மார்ச்- 27, 2025 வியாழக்கிழமை, பங்குனி 13. ஆம் நாள் மாத சிவராத்திரியும், பிரதோஷ விரதமும் ஒரே நாளில் அனுசரிக்கப்படுகிறது. இன்று தேய்பிறையில் வரும் இந்த மாத சிவராத்திரி பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நாளில், சிவபெருமான் சிவலிங்கத்தில் வசிப்பதாக ஐதீகம். சிவ பக்தர்கள் பிரதோஷ விரதத்தையும், மாசிச் சிவராத்திரியையும் மிகவும் புனிதமாக கருதுகின்றனர் .இந்த வழிபாடு செய்வதினால் பொருள் நன்மைகளை தரும் என்றும் ,அனைத்து எதிர்மறைகளையும் நீக்குவதற்காக பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பங்குனி மாதம் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி மிகுந்த விசேஷம். இது மகா சிவராத்திரிக்கு அடுத்த முக்கியமான சிவராத்திரி ஆகும். இன்றைய நாளில் சிவலிங்கா அபிஷேகம், பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய )ஜெபம் நோன்பு இருப்பது அதீத நன்மை நல்கும்.
பிரதோஷம் என்பது மாலை நேரத்தில்4:30 மணி முதல் 6:30 மணிக்குள் சிவபெருமான் மற்றும் நந்தியையும் வழிபடுவதற்கான சிறப்பு நேரமாகும். பிரதோஷ விரதம் கடைபிடிக்கும் போது சிவபெருமான் சந்திரமவுலீஸ்வர கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த நாளில் வில்வ அர்ச்சனை செய்து வில்வாஷ்டகம் படிக்க நீண்ட ஆயுள் கிடைக்கும். *குடும்ப அமைதி நிம்மதி கிட்டும்.*பாவங்கள் நீங்கி நன்மை பெருகும். படிக்கும் குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதும் குழந்தைகள் வீட்டில் இருப்பவர்கள் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அவர்களுக்கு புத்தி கூர்மை மேலும் தேர்வில் நன் மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.
* திருமண தடை நீங்கி வாழ்க்கையில் திருமண யோகம் கைகூடும்.
* புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்த வழிபாடு உற்றத் துணையாக இருக்கிறது.
இத்தனை மகிமை வாய்ந்த குரு பிரதோஷ விரதம் இருந்து வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வோமாக! வாழ்க வளமுடன். மேலும் இது போன்ற ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}