குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது என்ற களையை நீக்க உறுதி ஏற்போம்!

Feb 12, 2026,01:37 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


களை நீக்கினால் தான் நல்பயிர் விளையும் என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.


எந்த களையினை நீக்க வேண்டும் ?




குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவதை  (களை) நீக்குவது, பொதுமக்களாகிய நமது அனைவரின் கடமையாகும்  .

இன்று சர்வதேச குழந்தைப் போராளிகள் தினம் (International Day Against the Use of Child Soldiers).


சர்வதேச குழந்தைப் போராளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினம், ஆயுதப்படை மற்றும் ஆயுதக் குழுக்களில் குழந்தைகளை பயன்படுத்துவதை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டது. இந்த நாள் “Red Hand Day” என்றும் அழைக்கப்படுகிறது.


சரி குழந்தைப் போராளிகள் என்றால் என்ன... 18 வயதுக்குக் குறைந்த குழந்தைகளை  கட்டாயமாக அல்லது ஏமாற்றப்பட்டு, ஆயுதம் ஏந்தி போரில் ஈடுபடுத்துதல் அல்லது தகவல் பரிமாற்றம் செய்ய தூண்டுதல் மற்றும் 

உளவாளியாக செயல்படுத்துவது ஆகியவைதான். இதுதவிர சமையல், துப்புரவு, பொருட்கள் ஏந்துதல் போன்ற பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துகிறார்கள். இப்படி பல்வேறு நிலைகளில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டால், அவர்கள் குழந்தைப் போராளிகள் என அழைக்கப்படுகிறார்கள். சில சமயம், பெண் குழந்தைகளை பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள். இது போன்ற நிலைகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.


உலகின் பல பகுதிகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர்கள், தீவிரவாத செயல்கள் மற்றும் ஆயுத மோதல்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் எதிர்காலம், கல்வி, உடல் மற்றும் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.


2002ஆம் ஆண்டு, குழந்தைகளை ஆயுதப்படையில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக நிர்ணயிக்கும் Optional Protocol to the Convention on the Rights of the Child ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதை நினைவுகூறவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிப்ரவரி 12 இந்த தினமாக அறிவிக்கப்பட்டது.


குடும்பத்தில் வறுமை ஏற்படுவதும், குடும்பத்தில் உள்ளவர்களிடம் கல்வி அறிவு இல்லாமல் இருப்பதாலும், ஏதேனும் ஒரு சூழலால் குடும்பத்தை இழந்தவர்களாக இருப்பதாலும், கட்டாய ஆட்சேர்ப்பு செய்தல், அவர்களை பயமுறுத்தி அல்லது ஏமாற்றி குழந்தைகளை போராளிகளாக மாற்றுகிறார்கள். சமூக மற்றும் அரசியல் நிலைத்தன்மை இல்லாத 

சில குழந்தைகள் வாழ்வாதாரத்திற்காக தாங்களே போர்களில் சேரவும் செய்கிறார்கள். 


இள வயதிலேயே குழந்தைகள்  பல்வேறு தொழிலில் ஈடுபதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காயங்கள்,

ஊனமுற்ற நிலை, சத்து குறைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மனஅழுத்தம், பயம், மனச்சோர்வு

சமூகத்தில் பழக முடியாத நிலை போன்றவற்றாலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 


குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டில் காணப்படும் வறுமைகளை ஒழிக்க வேண்டும். அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டம் செயல்படுத்த வேண்டும். போரை எதிர்த்து அமைதியை ஆதரிக்க வேண்டும் . போருக்கான கைகள் அல்ல, வளர்ச்சிக்கான கைகளே தேவை என்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.


குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அவர்கள் கையில் புத்தகம் இருக்க வேண்டுமேயன்றி, ஆயுதம் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து சர்வதேச குழந்தைப் போராளிகள் தினத்தன்று , குழந்தைகளின் சிரிப்பையும் உரிமைகளையும் பாதுகாக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)

news

டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !

news

எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?

news

தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??

news

பிரியாணிக் காதல்!

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்