- ஸ்வர்ணலட்சுமி
பிப்ரவரி 14 2025. மாசி மாதம் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்ய பண பிரச்சினை தீர்ந்து வளமுடன் செல்வ செழிப்புடன் வாழலாம்.
ஆடி வெள்ளி ,தை வெள்ளிக்கிழமை போலவே மாசி மாதம் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகும்.
மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நாளைய தினம் பூரம் நட்சத்திரம் சேர்ந்து வருவதால் அதீத சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆண்டாள் அவதரத்த நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் .நாம் வீட்டில் பூஜை அறையில் ஐஸ்வர்ய லட்சுமி கோலம் போட்டு பச்சரிசி மாவினால் போடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் .பூஜை அறையில் உள்ள இறைவன் படங்களுக்கு புதிதாக மலர்கள் வைக்கவும் ,அதுவும் வாசனை மிகுந்த மலர்கள் வைப்பது மிகவும் சிறப்பு. மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர் மிகவும் பிடித்தமான மலராகும். பஞ்ச பாத்திரத்தில் நீர் ஊற்றி துளசி போட்டு வழிபடவும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமி தாயாரை மனதார வழிபடுவது மிகச் சிறப்பு. மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது மிகவும் நல்லது.

நாம் வீட்டில் நைவேத்தியமாக கற்கண்டு பொங்கல், பழங்கள் ,பால் நாட்டுச் சர்க்கரை வைத்து வழிபடலாம் .அவரவர் சூழலுக்கு ஏற்ப வீட்டில் செய்யலாம் அல்லது கடைகளில் இனிப்பு பொருள் வைக்க வேண்டும் என்பதால் லட்டு வாங்கி வைத்து வழிபடலாம் .
ஒவ்வொருவருக்கும் பல விதங்களில் பண பிரச்சினை இருக்கும். அவரவர் வேண்டுதல்களை இறைவனிடம் மனதார கூறி இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழிபாடு செய்ய தங்கள் பிரச்சனைகள் சரியாகிவிடும் என்பது ஐதீகம் .
முழு நம்பிக்கையோடு தங்கள் கடன் பிரச்சினைகள் தீரும் என்று மனதில் கூறி மகாலட்சுமி தாயாரை வழிபட படிப்படியாக பணப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
நாம் வழிபாட்டில் வைத்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கவும் .பிறகு அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபாடு செய்யலாம் .அனைவரும் அனைத்து வளங்களும் செல்வ செழிப்பும் பெற்று வாழ்வோமாக.
பரபரப்பு.. படபடப்பு.. அந்த கடைசி நேர டென்ஷன்.. THE FINAL SUBMISSIONS..!
ஒரு கழுதைக் கதை சொல்ட்டா பாஸ்.. Imagination of donkey's evaluation!
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
காலை நேரப் பூங்குயில்.. Morning is good When....!
எல்லாத்தையும் மறந்துட்டு.. கொஞ்சம் அமைதியாக.. Why We Need Meditation?
அமைதி அமைதி அமைதியோ அமைதி.. SILENCE CAN SPARK THE GROWTH OF NEW BRAIN CELLS!
தனிமை.. ஒரு வசீகரம்!
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
{{comments.comment}}