- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
NDRF-ன் எழுச்சி நாள் (Raising Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 19 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் NDRF வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
NDRF அதாவது தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்க இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் NDRF-ன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும், பேரிடர் காலங்களில் அவர்கள் நம்பிக்கையின் தூணாக விளங்குகிறார்கள். பேரிடர் காலங்களில் உயிர்களைக் காப்பதிலும், மீட்புப் பணிகளிலும் NDRF-ன் பங்கு வகிக்கிறது.
இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தனது எழுச்சி நாளை ஜனவரி 19-ம் தேதி கொண்டாடுகிறது.

நாட்டில் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பதற்காக, தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.) கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும், தேசிய பேரிடர் மீட்பு படை எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
பேரிடர் காலங்களில் எப்போதும் முன்கள பணியாளர்களாக செயல்படுபவர்கள் என அவர்களை பாராட்டுகிறார்கள்.
அவர்கள், தனித்திறனுடன் செயல்பட்டு, சிக்கலில் இருந்து மக்களை விடுவிக்கும் பணியை திறம்பட செய்கிறார்கள். அவர்கள் மக்களை பாதுகாப்பதற்காக முயற்சிகள் எடுத்து, நிவாரணம் அளித்து, மக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கின்றார்கள்.
இந்த தேசிய பேரிடர் மீட்பு படை எழுச்சி தினத்தில், நெருக்கடியான தருணங்களில் தீர்க்கத்துடன் முடிவெடுக்கும் ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கு ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.
நாட்டுக்கு உயர்தர சேவையை அவர்கள் வழங்குகிறார்கள். பேரிடருக்கு தயாராவது மற்றும் பொறுப்புடன் செயல்படுவது என உலகளவில் என்.டி.ஆர்.எப். வீரர்களுக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
கரூர் வழக்கு.. டெல்லி சிபிஐ விசாரணையில் நடப்பது என்ன.. விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}