- ஸ்வர்ணலட்சுமி
ரதசப்தமி என்பது தை அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் வரும் சப்தமி திதியில் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இதனை மகா சப்தமி என்றும் அழைப்பர். சப்தமி என்றால் ஏழு என்று பொருளாகும்.
இந்த ஆண்டு 2025 பிப்ரவரி 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தன் ரதத்தை வடகிழக்கு திசையில் தனது ஏழு குதிரைகளை திருப்பி பயணிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களை குறிக்கின்றன.
சூர்யா தேவனின் பிறந்த நாளாக ரதசப்தமி கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயணம் பயணத்தை முடித்துக் கொண்டு ரதசப்தமி அன்று வடக்கு நோக்கி உத்திராயணம் பயணம் தொடங்கும் தினமே ரத சப்தமி ஆகும்.

இது வசந்த காலம் ஆரம்பமாகவும் அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் பருவங்களின் அடிப்படையில் அமைந்தது. இந்திய விவசாயிகள் இதனை புதிய ஆண்டின் தொடக்கமாக கொண்டாடுகின்றனர். இந்து சமய குடும்பங்களிலும் சூரிய கடவுள் உள்ள கோவில்களில் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ரத சப்தமி அன்று முதல் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயரும், வசந்த காலத்தின் ஆரம்பம் இந்த நாளில் இருந்து ஆரம்பம் ஆகும்.
சூரிய பகவான் ரதத்தில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களையும், வாரத்தின் ஏழு நாட்களையும் குறிக்கிறது. ரத்தத்தில் உள்ள 12 சக்கரங்கள் 12 ராசிகளை குறிக்கின்றன .சூரிய தேவனின் தேரோட்டியாக அருணன் உள்ளார். ரதசப்தமி விழா சூரிய பகவானிடம் இருந்து ஆற்றலையும் ஒளியையும் பெரும் விழாவாக உள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு ரத சப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும் .திருமலையில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏழு வாகனங்களில் நான்கு மாத வீதிகளில் பவனி வருவார். அன்றைய நாள் சிறிய பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.
நாம் நமது வீடுகளில் பூஜை அறையில் ரதம் தேர்வடிவில் மாக்கோலம் இட்டு ,மலர்கள் ,பழங்கள் நைவேத்தியமாக பொங்கல் வைத்து, விளக்கேற்றி சூரிய மந்திரம் கூறி சூரியனை வழிபட்டு சூரிய நமஸ்காரம் செய்வதால் எல்லாவித நன்மைகளும் உண்டாகும் அவரவர் வேண்டுதல்களை உலகிற்கே ஒளி தரும் சூரிய பகவான் நிறைவேற்றுவார்.
ரதசப்தமி நாளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை கூற வேண்டிய மந்திரம்:

சூரிய காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி /தன்னோ சூரிய பிரசோதயாத்//
நவக்கிரகம்: சூரியன் :
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.
இவ்வாறு சூரியன் மந்திரம் சொல்லி நாம் ரதசப்தமி நாளை கொண்டாடுவதால் நமக்கு நல்ல தேஜஸ் நீண்ட ஆயுள் பெற்று எல்லா நலங்களும் வளங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}