என்னது இப்படியும் ஒரு நாள் இருக்கா?

Feb 27, 2026,01:40 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


நல்ல முன்மாதிரி காட்டுவதற்கே தனியா ஒரு நாள் வைத்திருக்காங்க. நம்ம செயல் மற்றவர்களுக்கு தாக்கம் கொடுக்குது என்பதைக் நினைவூட்டுற நாள். சின்ன நல்ல பழக்கமும் பெரிய மாற்றம் செய்யும் என்று சொல்ல வர்ற நாள்.


அது தான்  National “Set a Good Example Day” – தேசிய நல்ல முன்மாதிரி காட்டும் நாள்


நம்ம வீட்டுலயும், ஆபீஸ்லயும், தெருவுலயும் எல்லாரும் பேசுறது என்னன்னா “யாராவது நல்லா இருந்தா போதும்”ன்னு தான். ஆனா அந்த “யாராவது” நாம்தான் என்ற நினைப்பு வரும்போது தான் மாற்றம் தொடங்கும். அதைத்தான் நினைவூட்டுற நாள் தான் தேசிய “Set a Good Example Day” – நல்ல முன்மாதிரி காட்டும் நாள்.


நல்ல முன்மாதிரி காட்டணும் என்றால் பெரிய பெரிய விஷயம் செய்யணும் அவசியம் இல்லை. சின்ன சின்ன பழக்கங்களே பெரிய தாக்கம் கொடுக்கும். ரோட்டில் குப்பை போடாம டஸ்ட்பின்னுல போடுறது, ட்ராஃபிக்கில் ரூல்ஸ் பின்பற்றுறது, வரிசையில நின்னு காத்திருக்குறது – இவ்ளோத்தான். இதை நாம பண்ணும்போது பக்கத்துல இருக்குறவங்க கவனிக்காமலேயே கற்றுக்கிறாங்க.




வீட்டுக்குள்ள குழந்தைகளுக்கு சொல்லிக்கிட்டு நாம வேற மாதிரி நடந்துக்கிட்டோம்னா அது வேலை செய்யாது. நாம நேரத்துக்கு எழுந்து வேலை பாத்துக்கறது, பெரியவர்களை மரியாதையா பேசுறது, பெண்களை மதிக்குறது, சண்டை வந்தாலும் அமைதியா தீர்வு காண்றது – இவையே ரியல் எக்ஸாம்பிள். “சொல்லாதே… செய்து காட்டு”ன்னு சொல்வாங்க. அதுதான் இந்த நாளின் கருத்து.


ஆபீஸ்ல கூட இதே தான். வேலைக்கு டைம்க்கு வருறது, பொறுப்பா வேலை முடிக்குறது, பிறருடைய க்ரெடிட்டை எடுத்துக்காம நேர்மையா இருப்பது – இப்படி நடந்தா டீம்ல நல்ல கல்சர் உருவாகும். ஒருத்தர் சரியா இருந்தா மற்றவர்கள் கூட தானாக செட் ஆகிடுவாங்க.


சமூகத்திலும் இதே மாதிரி. ரத்த தானம் செய்யுறது, தேவையில்லாத விஷயத்துல ஹேட் ஸ்பீச் பேசாம இருக்குறது, சோஷியல் மீடியால பொய்யான தகவல் ஷேர் பண்ணாம சரிபார்த்து பேசுறது – இவையும் நல்ல முன்மாதிரி தான். நல்லது செய்ய பெரிய ஸ்டேஜ் வேண்டாம்; மனசு இருந்தா போதும்.


இந்த நாள் நமக்கு கேக்குற கேள்வி சிம்பிள்: “நம்மை பார்த்து இன்னொருத்தர் நல்ல வழியில போறாரா?” அப்படி இருந்தா அதுவே பெரிய சாதனை. இன்று ஒரு நல்ல பழக்கம் தொடங்கலாம். நாளை அது இன்னொருவருக்கு ஊக்கம் ஆகலாம். நல்ல முன்மாதிரி காட்டுறது ஒருநாள் விஷயம் இல்ல; தினசரி வாழ்க்கை ஸ்டைல் ஆகணும்.


நம்மால முடிந்த அளவுக்கு நல்லதை செய்து காட்டுவோம். பேசுறதைவிட செயலால் முன்னிலை பிடிப்போம். அதுவே உண்மையான மாற்றத்துக்கான முதல் படி.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்

news

மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

news

தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி

news

தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

news

சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி

news

'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!

news

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

news

முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை

அதிகம் பார்க்கும் செய்திகள்