சோமவார பிரதோஷம்.. மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி!

Jun 23, 2025,11:52 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் ஜூன் 23 திங்கட்கிழமை- சோமவாரம் அன்று ஆனி மாதம் ஒன்பதாம் தேதி தேய்பிறை பிரதோஷ நாளாகும். சிவமூர்த்தி ஸ்தோத்திரம்: ஓம் சிவ சிவசிவனே சிவபெருமானே போற்றி! போற்றி !விரைவினில் வந்தருள் விமலா போற்றி! போற்றி !போற்றி! மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி! போற்றி!


இன்று இருக்கும் பிரதோஷம் ஆஷாட மாத கிருஷ்ண பக்ஷத்தில் வரும் சோமவார பிரதோஷ நாளாகும் ."பிரதோஷம்" என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் திரியோதசி திதி அன்று பிரதோஷம் அனுசரிக்கப்படுகிறது. இந்த திங்கட்கிழமை சிவபெருமானுக்குரிய நாளாக இருப்பதால் இன்று வந்துள்ள பிரதோஷம் மிகவும் விசேஷமானது ஆகும். இந்த நாளில் பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டு விரதமிருந்து அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.




சிறப்புக்கள் : சோமவார பிரதோஷமான நாள் அன்று சிவபெருமானை வழிபடுவதால் ஆன்மீக பலம் ,அமைதி செல்வ வளம் ,கடன் பிரச்சினைகள், தம்பதியர் ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை பெருகும் என்று நம்பப்படுகிறது.


பிரதோஷ காலம் இன்று மாலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் வருகிறது.


பிரதோஷ காலத்தின் போது வலம் வரும் முறை உள்ளது .அதன்படி வலம் வரும்பொழுது அதீத நன்மை கிட்டும் பிரதோஷ தினத்தன்று வலம் வரும் முறையை "சோமசூத்ர  பிரதட்சணம்" அல்லது "சோம சூக்த பிரதட்சணம்" என்று அழைக்கப்படுகிறது.


எப்படி? வலம் வர வேண்டும் என்பதை எளிமையாக நான் வரைந்துள்ள படத்தில் காணலாம். சோம சூத்திரப் பிரதட்சணம் முதலில் நந்தியை வணங்கி பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் .அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக அப்ப்ரதக்ஷணமாக அதாவது எதிர் வலமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை போய் திரும்ப வேண்டும் .அபிஷேக தீர்த்தம் வரும் வழியை தாண்டாமல் வரவேண்டும். பிறகு போன வழியே திரும்ப வேண்டும் . நந்தியைதரிசனம் செய்து வழக்கமாக  வலம் வரும் வழி வர வேண்டும். அபிஷேக தீர்த்தம் வரும் வழியை தாண்டாமல் அப்படியே திரும்பி நந்தி வரை வ லம் வர வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்வதே :சோமசூத்திர பிரதட்சணம் "என்று அழைக்கப்படுகிறது.


இதற்கு ஒரு புராணக்கதை இருக்கிறது அக்கதை யாதெனில் ,ஆலங்கால விஷம் வெளிப்பட்டபோது பயத்துடன் அனைவரும் கயிலை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப் பிரதக்ஷணமாக அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே அவர்கள் திரும்பி ஓட அங்கும் அவர்களை விஷம் வந்து துன்புறுத்தியது. இவ்வாறு இட -வலமாக அவர்கள்  வலம் வந்த முறையை "சோம சூத்திர பிரதட்சணம்" என்று  கூறப்படுகிறது.


வீடுகளில் பூஜை அறையில் சிவபெருமானுக்கு உகந்த மலர்கள் ,வில்வ இலைகள் சாற்றி ,நைவேத்தியம் வைத்து நெய் விளக்கு ஏற்றி "ஓம் நமச்சிவாய" எனும் மந்திரத்தை கூறி மனதார வழிபட சிவபெருமான் நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.


தோஷங்களை நீக்குதல்- இந்த பிரதோஷ வழிபாடு, அதுவும் சோமவார பிரதோஷ வழிபாடு செய்து அனைவரது வாழ்விலும் அனைத்து வளங்களும் , நலங்களும் உண்டாகட்டும். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்