ஒரு கடிதம் எழுதினேன்.. நலம் நலமறிய ஆவல்!

Sep 01, 2023,01:38 PM IST

- தனலட்சுமி


சென்னை: கடிதம்.. எத்தனை சுகமான அனுபவம் அது.. எத்தனை அழகான விஷயம் அது.. எத்தனை அற்புதமான அனுபவம் அது..!


இளம் வயதில் கடிதம் எழுதுவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையாக, பரவசமாக, அற்புத அனுபவம் அளித்த  விஷயமாக இருந்ததை மறக்க முடியாது.


ஹாஸ்டல்களில் படிக்கும்போது மாணவர்களும் சரி, மாணவியரும் சரி, அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதுவதை ஒரு தினசரி கடமையாக செய்து வந்தார்கள். நான் நல்லாருக்கேன் நீங்க நல்லாருக்கீங்களா.. அம்மாச்சி நல்லாருக்கா.. தாத்தா உடம்பு பரவாயில்லையா.. தம்பி என்ன பண்றான்.. தங்கச்சி நல்லா படிக்கிறாளா.. இங்க எனக்கு 2 நாளா இருமலா இருக்கு.. இப்ப பரவாயில்லை.. அப்புறம் பீஸ் கட்டணும், 500 ரூபாய் மட்டும் முடிஞ்சா மணிஆர்டர் பண்ணி விடுங்க.. உடம்பைப் பார்த்துக்கங்கப்பா.. என்று கூறி எழுதப்பட்ட கடிதங்கள் கோடிக்கணக்கில் இருக்கும்.


எல்லாக் கடிதங்களுமே ஒரு காவியம்தான்.. யாரால் அதை மறுக்க முடியும். உறவுகளைப் பிணைத்திருக்கவும், அன்பைப் பகிரவும், தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பயன்பட்ட கடிதங்கள் இன்று காணாமல் போய் விட்டன.  இமெயில்கள், வாட்ஸ் ஆப் போன்றவை வந்த பின்னர், இன்று கடிதம் எழுதுவது என்பதே அருகி விட்டது.  கடிதம் எழுதுவது மிகப் பெரிய சந்தோஷத்தை மட்டும் அளிப்பதில்லை. மாறாக நமது மனதை மிக மிக தெளிவாகவும், அமைதியாகவும், நிதானமாகவும் வைத்துக் கொள்ளவும் உதவும் ஒரு அம்சமும் கூட.


செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. இப்படி ஒரு தினம் இருப்பதே பலருக்கும் தெரியாது. ஆனால் 2014ம் ஆண்டு முதல் இது கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆஸ்திரேலியாவைச்  சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவர்தான் இந்த உலக கடிதம் தினத்தை அறிமுகம் செய்து வைத்தார்.


இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக, ஊக்குவிக்கும் விதமா கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப் பொது மறையாக விளங்குகிறது. அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம்  பெற்றுள்ளது. 


இந்த காலகட்டத்தில் கையால் எழுதப்படும் கடிதங்கள் ரொமப குறைவு என்பது வருத்தத்திற்குரியது. கடிதம் எழுத வேண்டும்.. அப்பாவுக்கு அம்மாவுக்கு, சகோதரர்களுக்கு சகோதரிகளுக்கு உறவினர்களுக்கு,ஆசிரியர்களுக்கு, நண்பர்களுக்கு.. என யாருக்கெல்லாம் எழுதும் வாய்ப்புள்ளதோ அவர்களுக்கெல்லாம் அவ்வப்போது கடிதம் எழுதி அனுப்புங்கள்.. அருமையான அனுபவமாக அது இருக்கும்.


கடிதங்கள் காலத்தின் பொக்கிஷம் என்பதை எதிர்கால தலைமுறைகள் அறிந்துகொள்ள வேண்டும். மகள் இந்திரா காந்திக்கு, தந்தை ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ் பெற்றவை.. அந்த வரிசதையில் உங்களது கடிதங்களும் இணையட்டும்..  நமக்கு பிடித்தவர்களுக்கு இந்த தினத்தையொட்டியாவது ஒரேயொரு கடிதம் எழுதி நமது கடிதம் வரைதலைத் தொடங்குவோமே!

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்