- ஸ்வர்ணலட்சுமி
தேய்பிறை சஷ்டி: விசுவா வசு வருடம் 20 25 ஜூலை 16ஆம் தேதி ஆனி மாதம் 32 ஆம் நாள் புதன்கிழமை சஷ்டி திதி அமைந்துள்ளது. சஷ்டி விரதம் இருப்பதனால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்கிற பொருளும் உண்டு .நல்ல குழந்தை பேறு கிடைக்கும்.
முருகனைப் போற்றும் துதி வரிகள் :"முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே உன்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான்"
" சண்முக கடவுள் போற்றி சரவண த் துதித்தாய் போற்றி கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி "என்கிற வரிகளும் முருகனை போற்றுகின்றன.
தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் .ஆனி மாத கடைசி நாளான இன்று முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு. வீடுகளில் பூஜை அறையில் முருகன் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரிக்கவும். வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் அதற்கு அபிஷேகம் செய்து, வாசனை மலர்கள் வைத்து, அலங்காரம் செய்யவும் ஷட் கோண கோலம் இட்டு, ஆறு வெற்றிலை வைத்து அதன் மீது அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பு.
இன்று புதன்கிழமை சஷ்டி திதி அமைந்துள்ளதால் புத்த பகவான் உடைய நிறம் பச்சை என்பதால் பச்சை நிற ஆடை அணிந்து, பச்சை பயிரை வேகவைத்து அதில் உப்பு சேர்க்காமல் ,தாளிக்காமல் நெய்வேத்தியமாக வைத்து தீப தூப ஆராதனை செய்து வழிபாடு செய்வது சிறப்பு. குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட முருகன் அருள் கட்டாயம் கிட்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப விரதம் மேற்கொள்வது சிறப்பு.
மேலும் கணவன் மனைவி ஒற்றுமை ,குடும்ப அமைதி, பண பிரச்சினைகள், திருமண தடை நீங்க, தொழில் மேம்பட, ஆரோக்கியம் , குழந்தைகள் படிப்பு வேலை சிறக்க சஷ்டி விரதம் இருந்து வழிபட கஷ்டங்கள் கரைந்து, துன்பங்கள் தேய்ந்து, நல்வாழ்வு கட்டாயம் கிடைக்கும். "வேலுண்டு வினையில்லை ;கந்தன் உண்டு கவலை இல்லை"
விரதம் மேற்கொள்பவர்கள் மௌன விரதம் இருந்து, முருகன் பக்தி பாடல்கள்:- கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் ,கந்த குரு கவசம் ,வேல்மாறல், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி இதில் தங்களால் இயன்ற பாடல்களைப் படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்து கேட்கலாம்.
மேலும் பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்ட 44 வரிகள் கொண்ட "குமாரஸ்தவம் "படிப்பது மிகவும் சிறப்பானது ஆகும். இது சக்தி வாய்ந்த முருகன் துதி ஆகும். இது கந்த புராணத்தின் சுருக்கம் என்றும் கூறப்படுகிறது. இவையெல்லாம் படிப்பதற்கு நேரம் இல்லாதவர்கள் வேலைக்கு செல்பவர்கள் "ஓம் சரவணபவ "எனும் மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருப்பதினால் சகல சௌபாக்கியங்களும், வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும் .வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
தேய்பிறை சஷ்டி ஆன இன்று முருகன் அருள் கிடைக்க பெற்று, அனைவரும் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ்வோமாக!... மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!
நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்
நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி
பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது
விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்
{{comments.comment}}