சென்னை: தொடர்ந்து 3வது நாளாக சரிந்துள்ளது தங்கம் விலை.: ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160ம், நேற்று திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.200ம் குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் நகை விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.
இந்த விலை குறைவால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகை விலை உயர்ந்து வந்த நிலையில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மிகுந்த கவலை அடைந்து வந்தனர். தற்பொழுது நகை விலை குறைவு இது தான் சரியான நேரம் நகைப்பிரியர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். கிளம்புங்க கிளம்புங்க நகை வாங்க. அதுக்கு முன்னாடி நகை விலை குறித்த விபரத்தை பார்த்துட்டு போங்க...!
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,690 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 35 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.280 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,520 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,298 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,384 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி நிலை இன்று உயர்ந்துள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.70 காசுகள் உயர்ந்து ரூ.90.70 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 725.60 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.90,000க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.700 உயர்ந்து ரூ.90.700க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் குறைந்திருந்த வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று தங்கம் விலை குறைந்தும் வெள்ளியின் விலை அதிகரித்தும் உள்ளது.
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}