சென்னை : மாதந்தோறும் அமாவாசை திதி என்பது முன்னோர்களை வழிபடுவதற்குரிய நாளாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. மற்ற மாதங்களில் வரும் அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட தவறி இருந்தாலும் வருடத்திற்கு ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர்களை வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று அமாவாசைகளிலும் மிக முக்கியமானதும், முதன்மையானதுமாக சொல்லப்படுவது புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தான்.
திதிகள் மொத்தம் 15 உள்ளன. ஒவ்வொரு மனிதனும் இந்த 15 திதிகளில் ஏதாவது ஒன்றில் தான் பிறக்கவும், இறக்கவும் முடியும். அப்படி நம்முடைய முன்னோர்கள் எந்த திதியில் இருந்தார்கள் என்பது தெரியாத காரணத்தால் அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் அளித்து வழிபட தவறி இருக்கலாம். இப்படி முன்னோர்களை வழிபட தவறுவதால் பித்ருதோஷமும், பித்ருக்களின் சாபமும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், மரணத்திற்கு பிறகும் அவர்களுக்கு பிறவி இல்லாத முக்தி நிலை கிடைக்க வேண்டும், பித்ரு லோகத்தில் அவர் துன்பம் இன்றி வாழ வேண்டும் என்று என்பதற்காக நாம் மகாளய அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும், அதாவது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்களும் முன்னோர்களுக்கு தினமும், எள்ளும் தண்ணீருமண இறைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
மற்ற எந்த அமாவாசைகளுக்கும் இல்லாத சிறப்பு மகாளய அமாவாசைக்கு உண்டு. அதாவது, மகாளய அமாவாசைக்கு முன்பு வரும் 15 நாட்களையும் மகாளய பட்சம் என்கிறோம். மகாளய என்றால் ஒன்று சேருதல் என்று பொருள். பட்சம் என்றால் 15 நாட்கள் கொண்ட கால அளவாகும். நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மை பார்ப்பதற்காக பூமிக்கு வந்து, நாம் செய்யும் வழிபாடுகள், பித்ரு தர்ப்பணம், தானம் ஆகியவற்றை நேரடியாக ஏற்றுக் கொண்டு, நமக்கு ஆசி வழங்கும் காலமாகும். பித்ரு பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களை வழிபட தவறி இருந்தாலும் நிறைவாக வரும் மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக பித்ருக்களை வழிபட வேண்டும். இதனால் ஓராண்டு அமாவாசை விரதம் இருந்து பித்ருக்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி துவங்கி, அக்டோபர் 01ம் தேதி வரை பித்ரு பட்சம் காலம் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு அடுத்து அக்டோபர் 02ம் தேதி மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் தாய்-தந்தை, குழழந்தைகள், மனைவியை இழந்த ஆண்கள் ஆறு, கடல், குளக்கரைக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தோ அல்லது எளிமையாக வீட்டிலேயே எள்ளும் தண்ணீரும் இரைத்தோ வழிபட வேண்டும். இந்த ஆண்டு மகாளய அமாவாசை புதன் கிழமை வருவதால் சூரிய உதயத்திற்கு, அதாவது 6 மணிக்கு பிறகு, காலை 09.30 மணிக்கு முன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முடிக்க வேண்டும். காலை 11.30 முதல் 12 மணி வரையிலான நேரத்திற்கு பித்ருக்களின் படத்திற்கு முன் இலை போட்டு அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து படையல் இட வேண்டும்.
முதலில் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைத்து விட்டு, பிறகு யாராவது இல்லாதவர்களுக்கு உணவு தானம் வழங்கிய பிறகு மூன்றாவதாகவே நாம் சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மாலை 6 மணிக்கு பிறகு வீட்டிலோ அல்லது கோவிலுக்கு சென்று தனியாக நல்லெண்ணெய் தீபம் ஏற்று முன்னோர்கள் நற்கதி அடைய வழிபட வேண்டும். இதற்கு மோட்ச தீபம் என்று பெயர். இது நம்முடைய முன்னோர்களை மோட்சம் அடைய செய்யும். இதனால் 21 தலைமுறையினர் செய்த பாவங்களும், முன்னோர்கள் மோட்சம் அடைய வழி செய்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}