ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

May 14, 2024,02:17 PM IST

திருப்பூர்: திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.


கோடைக்காலத்தில் தான் தொடங்குகிறது மாம்பழ சீசன். முக்கனிகளில் ஒன்றாக இருப்பது மா. மாம்பழங்களை பார்த்தாலே அதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஏன் தெரியுமா? அதன் கலரும், அதன் வாசனையும் நம்மை சுண்டி இழுக்கும். மாம்பழங்களில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது இந்த மாம்பழங்கள். 


இப்படிப்பட்ட சத்தும் சுவையும் மிகுந்த மாம்பழம் சீசன் தற்பொழுது தொடங்கியுள்ளது. மாம்பழ சீசன் வந்தாலே, அதனுடன் சேர்ந்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் வந்து விடுகின்றன. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களால்  உடல் உபாதைகள், தலைவலி, உடல்சூடு, மயக்கம், தலை சுற்றல், தீராத வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்படும். ஆதலால் இந்த முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அரசு தடை செய்துள்ளது. 




இருப்பினும் சந்தைகளில்  ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றன. அவற்றை தடுப்பதற்கு சுகாதாரத்துறை எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் தடுக்க முடியாத அளவிற்கு ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்கப்பட்டு தான் வருகிறது.


இந்நிலையில்,  இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த சந்தைகளில் உள்ள 102 பழக்கடைகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 12 கடைகள் விதிமுறைகள் மீறி மாம்பழங்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது. இதை மீறி மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்

news

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத் பவார்.. விமான விபத்தில் உயிரிழப்பு!

news

சரத் பவார் - அஜீத் பவார்.. குரு சிஷ்யராக.. தந்தை மகனாக.. நெகிழ வைத்த உறவு!

news

மகாராஷ்டிராவை அதிர வைத்த அஜீத் பவார் விமான விபத்து.. மறக்க முடியாத தலைவர்!

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

news

கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்