மதுரை: மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் வாரந்தோறும் பிப்ரவரி 1 முதல் 23 வரை சனி, ஞாயிறுகளில் இலவச கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அலங்காநல்லூரில் மிக பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்க அரசாணை கடந்த 2023 ஆண்டு, பிப்ரவரி 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதற்காக ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டு, ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், விருந்தினர்கள் அமரும் இடம், அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள் என மொத்தம் 83 ஆயிரத்து 462 சதுரடி பரப்பளவில் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அரங்கிற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதுழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டுத் துறையின் வழக்கமான போட்டிகளையும் நடத்தி வருகிறது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத காலங்களிலும் சுற்றுலா துறை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாக வாரம் தோறும் கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் சனி ஞாயிறுகளில் இலவசக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த கலை நிகழ்ச்சிகள் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 23ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இதில் பாரதம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சிகள், மற்றும் இசைக் கச்சேரிகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத்தன்று சிறப்பு பக்தி இன்னிசை இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
தைப்பூசம்: முருகப்பெருமானை போற்றிக் கொண்டாடும் திருநாள்!
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: ஆனந்த் அறிவிப்பு
கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
{{comments.comment}}