சென்னை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம். ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது என போக்குவரத்து துறை சுற்றறிக்கை குறித்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:
பைக் டாக்சிகளை இயக்குவதற்கு தடை எதுவும் இல்லை. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. பைக் டாக்சிகளில் பயணிக்கும் பயணிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்களின் தொழிலுக்கு இது பாதிப்பாக இருப்பதாக கூறி நேற்று புகார் தெரிவித்திருந்தனர். அந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் விதி மீறல் இல்லாமல் பைக்குகள் ஓட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசும், நீதிமன்றமும் என்ன முடிவுக்கு வருகிறதோ, அந்த அடிப்படையில் தான் நாமும் செயல்பட முடியும். எனவே அதை எதிர் நோக்கி நாமும் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் பல்வேறு விஷயங்களில் நாம் தனித்துவமாக இருந்தாலும், சில நேரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு என்ன தேவை இருக்கிறதோ அதை ஒட்டியும் செல்ல வேண்டி இருக்கிறது. ஆம்னி பேருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்தியா முழுவதிலும் இருக்கின்ற ஒரே நடைமுறை தான் நாமும் செயல்படுத்துகின்றோம்.
இப்போதைக்கு இயங்குகின்ற ஊர்திகள் இயங்கலாம். வீதி மீறல்கள் இருக்கக் கூடாது என்பது தான் மிக முக்கியமானது. இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். ஓட்டுனருக்கு லைசன்ஸ் இருக்க வேண்டும். வாகனம் எப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் இருக்க வேண்டும். சிறு விபத்து நடந்தால் கூட பின்னால் அமர்ந்துள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது. அதையெல்லாம் கவனத்திற்கு கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}