திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோவிலுக்கு வந்த பெண் தலை மீது மரக் கிளை விழுந்ததில் அந்தப் பெண் படுகாயமடைந்தார்.
திருப்பதியில் ஜபாலி ஆஞ்சநேயசாமி கோவில் உள்ளது. திருப்பதி மலையில் இந்தக் கோவில் உள்ளது. திருப்பதிக்கு வருவோர் இந்தக் கோவிலுக்கும் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒரு பெண் தனது குடும்பத்தினரோடு சாமி கும்பிடச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் இருந்த மரத்திலிருந்து பெரிய கிளை ஒன்று அப்படியே அந்தப் பெண் தலை மீது விழுந்தது.

கிளை விழுந்த வேகத்தில் அந்தப் பெண் அப்படியே கீழே விழுந்து மூர்ச்சையானார். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆபத்து ஏதும் இல்லை. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தலை மற்றும் கழுத்து எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்ற பெண்ணின் தலை மீது மரக் கிளை விழுவதை அங்கிருந்த ஒரு பக்தர் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}