ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இயக்குநர் மணி ரத்னம் மற்றும் கமல்ஹாசனின் "தக் லைஃப்" திரைப்படம், சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் மந்தமான கதை, முன்னணி நடிகர்களின் ஆழமற்ற கதாபாத்திரங்கள் ஏமாற்றம் அளித்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகை திரிஷாவின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், கதையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் விமர்சனங்கள் வந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக திரிஷா ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். படத்தில் கமல்ஹாசனுக்கும் திரிஷாவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், திரிஷா, "தக் லைஃப்" திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற உடையில் அவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஒரு ஏலியன் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இது, அவரது கதாபாத்திரத்தை விமர்சித்தவர்களுக்கு மறைமுகமான பதிலடியாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

திரிஷாவின் கருத்துக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர், "நான் இப்போதுதான் தலைப்பைக் கவனித்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அதைப் படிக்கவில்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எனக்குப் புரிகிறது" என்று கூறியுள்ளார்.
திரிஷாவின் நடனக் காட்சி நீக்கப்பட்டதற்கு மற்றொரு ரசிகர் வருத்தம் தெரிவித்துள்ளார். "அன்புள்ள திரிஷா, உங்கள் முயற்சிகள் வீணாகிவிட்டன. முத்த மழை பாடலில் உங்கள் நடனத்தை பார்க்க முடியவில்லை. மிகவும் ஏமாற்றமாக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
திரிஷா, தக்லைஃப் படத்தில் கமல்ஹாசனின் காதலியாக நடித்துள்ளார். இருவருக்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரிஷா இதுகுறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, நான் படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பே இது எனக்குத் தெரியும். இது ஒரு மேஜிக் என்று நினைத்தேன். அப்போது நான் படத்தில் கூட இல்லை என்றார்.
திரிஷாவின் "சுகர் பேபி" பாடலின் நடன அசைவு வைரலாகி, ரசிகர்கள் அதை இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வருகின்றனர், அதை திரிஷா மீண்டும் பதிவிட்டு வருகிறார். "தக் லைஃப்" படத்தில் சிம்பு, அபிராமி, நாசர் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}