- ஸ்வர்ணலட்சுமி
ஓம் பைரவனே போற்றி!
ஓம் அஷ்டரூபனே போற்றி!
ஓம் அஷ்டமி தோன்றலே போற்றி!
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி!
ஓம் ஆனந்த பைரவனே போற்றி!
ஓம் ஆலய காவலனே போற்றி!
மார்ச் -22 20 25 பங்குனி மாதம், எட்டாம் நாள், சனிக்கிழமை அன்று தேய்பிறை அதாவது ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் அஷ்டமி திதி ஆகும். அன்று காலபைரவர் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது. இந்த தேய்பிறை அஷ்டமியில் திரியம் பகாஷ்டமி என்று சிவாலயங்களில் பைரவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும்.
அஷ்டமி திதி தான் சிவபெருமானின் உக்கிர வடிவங்களில் ஒருவரான காலபைரவர் அவதரித்த திதியாகும்.
ஸ்ரீ கால பைரவர்
கபாலத்தை கையில் ஏந்தியவர். காதுகளில் அழகிய குண்டலங்களை தரித்து இருப்பவர் .கையில் தண்டத்தை வைத்திருக்கும் இவர் கருமை நிறமுடையவர். சர்ப்பத்தை பூணூலாக கொண்டவர். போர்க்களத்தில் காட்சி தருபவர் .இடையூறுகளை மாய்த்து தம் பக்தருக்கு இன்பம் அளிப்பவர்.
நேரம்: பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி மார்ச் 22 அன்று 1:.01 a m முதல் மார்ச் 23 1:41 am வரை. சனிக்கிழமை 22ஆம் தேதி நாள் முழுவதும் அஷ்டமி திதி உள்ளது.
இன்றைய நாள் சனீஸ்வரனின் எதிர்மறை தாக்கம், சனி பெயர்ச்சிக்கான பரிகாரமாக அமைந்திருப்பது மிகுந்த விசேஷமாக உள்ளது. சனிக்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால், சனி தோஷம் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம்.
பங்குனி தேய்பிறை அஷ்டமி வழிபடும் முறை
சிவாலயங்களில் முதல் பூஜை விநாயகருக்கும், கடைசி பூஜை பைரவருக்கும் நடக்கும். சூரியன் அஸ்தமன நேரத்தில் பைரவருக்கு அஷ்டமி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. சிவாலயத்திற்கு சென்று அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். அரளி பூ மாலை, முக்கியமாக செவ்வரளி மாலை, எழுமிச்சம்பழ மாலை,, ரோஜாப்பூ மாலை, சிவப்பு வஸ்திரம் வாங்கிச் செல்லலாம். வடை மாலை சாற்றி வழிபடுவது மிகச்சிறந்தது. நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் அவரவர் வேண்டுதல்கள் நிறைவேறும். மிளகு தீப வழிபாடு செய்வது அதீத நன்மை பயக்கும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சனி ,ராகு போன்ற கிரகங்களின் நன்மைகளை தரக்கூடியது. வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, பண பிரச்சினைகள் குடும்ப பிரச்சினைகள் நிவர்த்தி ஆகும் .செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
வீட்டில் பைரவாஷ்டகம் பைரவ போற்றி பாராயணம் செய்து, விளக்கேற்றி, மனதார வேண்டுபவர்களுக்கு மன அமைதி ,உடல்நலம், நீள் ஆயுள் ,நிறை செல்வம், உயர் புகழ் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை .காலத்தினால் தீராத பிரச்சனைகள் தொல்லைகள் நீங்கும். நல் அருள் கிட்டும்.
மேலும் இது போன்ற ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
{{comments.comment}}