திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்பதற்கு தரம் குறைந்த நெய் பயன்படுத்தப்பட்டது உண்மை தான். இது சோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளது அவைனரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் இது பொய் என ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு தயாரிப்பிற்கு நெய் விநியோகம் செய்யும் தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்., டெய்ரி நிறுவனமும், தாங்கள் தரமான நெய்யை தான் திருப்பதிக்கு அனுப்பி வருவதாகவும் கூறி இருந்தது.
இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமானதால் இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான இஓ ஷியாமளா ராவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், நான் தேவஸ்தானத்தின் புதிய இஓ.,வாக பதிவியேற்றதுமே திருப்பதி லட்டிற்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து முதல்வர் என்னிடம் வேதனை தெரிவித்தார். இதனையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்த துவங்கினோம். விநாயோகஸ்தர்களிடம் தரமான நெய்யை அனுப்பாவிட்டால் தடை செய்யப்படுவீர்கள் என எச்சரித்திருந்தோம்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் ஏ.ஆர்.,டைரி ஃபுட்ஸ் நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்கள் நெய்யின் தரத்தை அதிகப்படுத்தி வழங்கினர். நெய்யின் தரத்தை துல்லியாக கண்டறியும் ஆய்வகங்கள் எங்களிடம் இல்லை. அதனால் டெண்டர் மூலம் விலையின் அடிப்படையில் மட்டும் நெய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பிறகு லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை சர்வதேச ஏற்றுமதியாளர்கள், நெய்யின் தரத்தை கண்டறிய பயன்படுத்தும் ஆய்வகத்திற்கு நெய் மாதிரிகளை அனுப்பி பரிசோதனை செய்தோம். அதில் துரதிஷ்டவசமாக மோசமான அறிக்கையே கிடைத்தது.
ஆய்வு அறிக்கையில் நாங்கள் அனுப்பிய நெய் மாதிரியின் தாவர மற்றும் விலங்கு கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டது. விலங்கு கொழுப்பு என்பது பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் உள்ளிட்டவைகள் கலந்ததாக உள்ளது. சுத்தமான பசு நெய்யின் தர புள்ளி என்பது 95.68 முதல் 104.32 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஆய்விற்காக அனுப்பிய நெய்யின் தரம் வெறும் 20 புள்ளிகளை கொண்டதாக மட்டுமே இருந்தது.
இதனால் நெய்யின் தரத்தை பரிசோதிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. எங்களுக்கென தனியாக பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}