வாட்ஸ்ஆப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு... ஆந்திர மாநில அரசு சொல்வது என்ன?

Feb 17, 2025,06:30 PM IST

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் மூலமாக தரிசன டிக்கெட்டை புக் செய்து கொள்ளும் புதிய முறையை ஆந்திர அரசின் வழிகாட்டுதலின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தரிசன டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Whatsapp Governance ஐ வலியுறுத்தும் வகையில் மக்களுக்காக அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் மூலம் வழங்க சந்திரபாபு நாயுடு தலையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோவில்களுக்கான தரிசன டிக்கெட், தங்கும் அறைகள், நன்கொடைகள் ஆகியவற்றையும் வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலம் முன்பதிவு செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.




மத்திய அரசுடன் இணைந்து ரயில் டிக்கெட்களையும் வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக் கொள்ளும் சேவையையும் வழங்க ஆந்திர அரசு மத்திய அரசுடன் பேசி வருகிறது. இது தவிர பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் போன்ற சேவைகளையும் இதன் வழியாக பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மற்றும் திருப்பதி தரிசன டிக்கெட்டை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அதை தடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்து கொண்ட பிறகு, அனைத்து துறைகளின் சேவைகளையும் பாதுகாப்பான முறையில் வழங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.


அதாவது க்யூஆர் கோட் மற்றும் ஆதார் மூலம் சரிபார்த்த பிறகு பாதுகாப்பான முறையில் இதை அமல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பொது மக்கள் எளிமையாக ஆந்திர அரசின் சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதேசமயம், வாட்ஸ்ஆப் மூலம் ஆந்திர அரசின் சேவைகளையும், திருப்பதி டிக்கெட்களையும் முன்பதிவு செய்யும் முறையை ஆந்திர அரசு இதுவரை அமல்படுத்தவில்லை. இதை அமல்படுத்துவது குறித்த பூர்வாங்க ஆலோசனைகள் மட்டுமே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் இது அமலுக்கு வரவில்லை.


இதற்கிடையில் ஆந்திர அரசின் இந்த புதிய திட்டத்தை பயன்படுத்தி, இணையதளத்தில் வாட்ஸ்ஆப் நம்பர் ஒன்றும், அந்த எண்ணிற்கு Hi என மெசேஜ் அனுப்பி, அதில் கேட்படும் விபரங்களை அளித்து, பணம் செலுத்தினால் திருப்பதி தரிசன டிக்கெட் வாட்ஸ்ஆப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில் சிலர் டிக்கெட் புக் செய்து வருகிறார்கள். ஆனால் இரண்டில் எது உண்மை என இதுவரை ஆந்திர அரசு மற்றும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


இப்போதைய நிலையில் இன்னும் இந்த வாட்ஸ் ஆப் டிக்கெட் முன்பதிவு அமலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்