டீமுக்கு வசுந்தரா கொடுத்த ஷாக்.. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

Apr 30, 2023,09:40 AM IST
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். பாசமான, கண்டிப்பான குடும்ப கதை என்பதால் இந்த சீரியலுக்கு பேன்ஸ் அதிகம். அதிலும் தமிழ், சரஸ்வதியின் க்யூட்டான ரொமான்டிக் காட்சிகளுக்கு தனி பேன் பேஸ் உண்டு. 

பல திருப்பங்கள், பரபரப்புக்களுடன் தமிழும் சரஸ்வதியும் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் தற்போது, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நிறை மாத கர்ப்பமாக இருக்கும் வசுந்தரா வீட்டில் தனியாக கீழே மயங்கி விழுந்து கிடக்கிறார். வசுந்தரா தன்னை கூப்பிடுவது போல் உள்ளுணர்வு ஏற்பட்டதால் யதார்த்தமாக வீட்டிற்கு வரும் சரஸ்வதி, வசுந்தராவை மருத்துவமனையில் சேர்க்கிறார். அதோடு வசுந்தராவிற்கு ரத்தமும் கொடுத்து அவளின் உயிரை காப்பாற்றுகிறார்.

இதனால் சரஸ்வதியை அழிக்க வேண்டும் என பல வில்லித்தனங்கள் செய்த வசுந்தராவின் அம்மா சந்திரகலா மனசு மாறி, சரஸ்வதிக்கு நன்றி சொல்கிறார். அதோடு குழந்தையையும் சரஸ்வதி கையில் கொடுத்து, பாராட்டுகிறார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் சரஸ்வதிக்கு நன்றி சொல்ல செம சென்டிமென்ட் சீன் நடக்கிறது. ஆனால் மீண்டும் ஏதாவது செய்து குடும்பத்தை பிரிக்க ராகினியின் கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் பிளான் செய்கிறார்கள்.




குழந்தை பிறந்ததை தமிழுக்கு சொல்லும் சரஸ்வதி, வசுந்தராவை பார்த்து விட்டு வீட்டிற்கு வருவதாக சொல்கிறாள். பெரியப்பா ஆன சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார் தமிழ். இனி அடுத்து என்ன நடக்கும்? பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேருமா? கோதை மீண்டும் சரஸ்வதியையும் தமிழையும் ஏற்றுக் கொள்வாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வர போகிறது.

அது என்னவென்றால், இந்த சீரியலில் வசுந்தரா கேரக்டரில் நடிக்கும் தர்ஷனா, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் என்ன காரணத்திற்காக சீரியலில் இருந்து விலகுகிறார் என தெரியவில்லை. இதனால் அடுத்த வசுந்தரா யார்? இனி வசுந்தரா கேரக்டரே இருக்காதா என பல கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 

சின்னத்திரை நடிகையான தர்ஷனா, இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் வில்லி ரோலில் நடித்துள்ளார். அழகான சீரியல் வில்லிகள் வரிசையில் இவருக்கும் இடம் உண்டு. சித்தி 2 சீரியலில் வில்லியாக வந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர், தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார். கொஞ்சி கொஞ்சி இவர் தனது கணவரை பேபி என அழைக்கும் ஸ்டைல் பலரின் ஃபேவரைட்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்