பனையூரில் வெளியான த.வெ.கவின் 2வது மா.செக்கள் லிஸ்ட்.. விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

Jan 29, 2025,04:53 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.  மேலும் கட்சியினர் மத்தியில் உருக்கமாகவும் அவர் பேசியுள்ளார். அவர் பேசிய பேச்சு கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் பூஸ்ட்டாக அமைந்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கினார் நடிகரும் தவெக தலைவரும் ஆகிய விஜய். அதன்பின்னர் கட்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். கடந்த அக்., 27ம் தேதி இவர் நடந்திய மாநாடு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும், தவெக கட்சியின் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. 

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். கட்சி தொடங்கி ஓராண்டு முடிய உள்ள நிலையில், சமீபத்தில் தான் 19 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து அறிவித்துள்ளார். நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார். 



அது குறித்து கடந்த 24ம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். அதன் பின்னர் முதல் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை அடக்கிய பட்டியலை விஜய் வெளியிட்டு உள்ளார். அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜய் முதலில் ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது, உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது எனக்காக துணை நின்று என்னுடன் உழைத்தீர்கள் பயணித்தீர்கள். உங்களது நீண்ட கால கோரிக்கை படி நாம் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம். அனைவரும் சேர்ந்து பயணிப்போம். நிச்சயம் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம். முன்பு நாம் மக்களுக்கு சேவை ஆற்றியதை விட இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்பின்னர் 2ம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டார். 2வது கட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகள் விவரம்:

சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக இசிஆர் சரவணன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக தாமு, தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக அப்புனு, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக எம்.சிவா உள்ளிட்ட 19 பேர் கொண்ட 2 கட்ட மாவட்ட செயலாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜய்.  

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தவெக தலைவர் விஜய் சான்றிதழ் மற்றும் வெள்ளி நாணயம் வழங்கியுள்ளார். தவெக மாவட்ட செயலாளர் குறித்த அறிவிப்பு வந்த அரை மணி நேரத்தில் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர் தொண்டர்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்