பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

Feb 22, 2025,07:06 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழத்தின் முதலாம் ஆண்டு விழா பிப்., 26ம் தேதி நடைபெறும் என்றும், இதில் கலந்து கொள்ள 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்படும் என்றும் தவெக தெரிவித்துள்ளது.


கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய் ஆரம்பித்த கட்சி தான் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பித்ததில் இருந்து கட்சி பணிகளை ஒவ்வொன்றாக விஜய் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் விஜய் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்றும் விஜய் அறிவித்தார்.




2026ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.  இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கட்சியினரை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் விஜய் சந்திக்க உள்ளார். சமீபத்தில், பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக பரந்தூர் மக்களை விஜய் நேரடியாக சந்தித்து பேசியது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், கட்சி  தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, கட்சி முதலாம் ஆண்டு விழா பிப்ரவரி 26ம் தேதி காலை 9 மணிக்கு  நடைபெற உள்ளது. இந்த விழா சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு கூட்டம் அதிகம் கூடும் என்பதால், முக்கிய நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது. இந்த பாஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ள நிலையில், 2000 பேருக்கு மட்டும் பாஸ் வழங்க கட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

அதிகம் பார்க்கும் செய்திகள்