சென்னை: காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க. தேர்தல், அரசியல் பற்றியெல்லாம் இந்த மேடையில் பேச வேண்டாம். தங்களின் பள்ளி, ஆசிரியர்கள் பற்றி பேசுங்கள் என்று தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் கையால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கிலும், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் மூன்றாவது வருடமாக 2025 ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா மூன்று கட்டங்களாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா இன்று 3வது கட்டமாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,

எல்லாருக்கும் வணக்கம். நேற்று குஜராத்தில் மிகப்பெரிய சோகமான விமான விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் புகைப்படங்களை பார்க்கும் போது மனம் பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது. இருந்தவர்கள் எல்லாருக்காகவும் இரண்டு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்துவோம்.
இங்கு வந்திருப்போருக்கு ஒரு சின்ன வேண்டுகோள், இன்றைய நிகழ்ச்சியில் பேச்சை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். யாரும் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 2026 ஆம் ஆண்டு தேர்தல் பற்றியோ, என்னை காமராஜர், இளைய காமராஜர் அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள். நீங்கள் உங்களுடைய ஆசிரியர்கள், உங்கள் பள்ளி பற்றி பேசுங்கள். மற்ற விஷயங்கள் பற்றி பேசுங்கள். தயவு செய்து இது மாதிரியெல்லாம் பேசாதீர்கள். நன்றி என்று தெரிவித்துள்ளார்.
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
{{comments.comment}}