மதுரை : தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக சார்பில் தானே போட்டியிடுவதாக மக்கள் நினைத்து ஓட்டளிக்க வேண்டும் என மதுரையில் நடந்த தவெக 2வது மாநில மாநாட்டில் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
தவெக கட்சியின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த இந்த கூட்டத்தில் விஜய் வழக்கம் போல் தீம் சாங் வெளியிட்டு, ரேம்ப் வாக் சென்று தனது உரையை துவக்கினார். விஜய் பேசுகையில், தங்களின் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக தான் என்றும் மீண்டும் வலியுறுத்தி பேசினார். பாஜக மற்றும் திமுக.,வை மீண்டும் கடுமையாக தாக்கி பேசினார் விஜய். பாஜக., உடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது என்றும் விஜய் அறிவித்து விட்டார்.
அதிரடி உரைக்கு இடையே, தவெக.,வின் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக விஜய் தெரிவித்ததும் மாநாடு அரங்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மீடியாக்களும் பரபரப்பாகின. மதுரை கிழக்கு தொகுதியில் விஜய் என்றதும் கூட்டத்தில் பெருத்த கரகோஷம் எழுந்தது. ஆனால் இன்னும் முடிக்கவில்லை பேச்சை துவங்கிய விஜய், மதுரை வடக்கு, மதுரை மத்திய தொகுதி, உசிலம்பட்டி, சோழவந்தான் என மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளின் பெயரையும் வரிசையாக சொல்லி, அனைத்திலும் வேட்பாளராக விஜய்யே போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
பிறகு அதற்கு விளக்கம் அளித்த விஜய், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை விஜய் போட்டியிடுவதாக நினைத்து அனைவரும் ஓட்டளித்து, மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம், 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதையே விஜய் இப்படி சூசகமாக கூறி உள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, அவர் வேட்பாளர்களாக நிறுத்த போகும் அனைவரும் சாமானிய மக்களில் ஒருவராக இருப்பார்கள் என்றும் தெரிகிறது. விஜய்யின் இந்த பேச்சு தமிழக மக்களிடமும், தமிழக அரசியலிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கலாம்.
234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர்.. மதுரை மாநாட்டில் விஜய் அதிரடி அறிவிப்பு
சிங்கம் வேட்டைக்குத்தான் வெளியே வரும்.. தனித்து வந்தாலும் தைரியமாக வரும்.. விஜய்
அதிரும் மதுரை... மக்கள் வெள்ளத்தில் விஜய்.. தொடங்கியது தவெக 2வது மாநில மாநாடு!
100 அடி இல்லங்க... 40 அடி உயர கொடி கம்பம்... கொடி ஏற்றுகிறார் தவெக விஜய்!
மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது மதுரை பாரபத்தி...மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்
Madurai TVK Maanadu: தவெக மாநாட்டில் விஜய் செய்ய இருக்கும் தரமான சம்பவம்!
12 நாட்கள் சரிவிற்கு பின்னர்.... இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 உயர்வு!
{{comments.comment}}