மாமல்லபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, இந்த ஆண்டுக்கான முதற்கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 2000 பேர் பங்கேற்க இருக்கின்றனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் நோக்கில், அவர்களை ஊக்குவிக்க தொடர்ந்து இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். விஜய் கையால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கிலும், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மூன்றாவது வருடமாக 2025 ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா மூன்று கட்டங்களாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட பாராட்டு விழா இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த பரிசளிப்பு விழாவில் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர், ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதியைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்க இருக்கின்றனர். சுமார் 2000 பேர் இந்த விழாவில் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் பெற்றோர்களுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விழா அரங்கிற்குள் செல்போன், பேனா, பேப்பர் மற்றும் இதர பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விழாவில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு தவெக தலைவர் விஜய் ஊக்க தொகை, தங்க நாணயம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.
இந்த பரிசளிப்பு விழாவை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் மாமல்லபுரம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விழா நடைபெறும் நுழைவு வாயில் முதல் அலங்காரங்கள் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. மேலும் கல்வி பரிசளிப்பு விழா நடைபெறும் இடத்திற்கு வரும் விஜய்க்கு மேல தாளங்கள் முழங்க நாட்டுப்புற கலைஞர்களுடன் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. அதே சமயத்தில் மாணவர்களுக்கான இந்த பாராட்டு விழாவில், கட்சி விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டாமென்று தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனக்காயங்களும் துன்பங்களும் (Hurt & Suffering)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
{{comments.comment}}