தவெக செயற்குழு கூடுகிறது.. விஜய் சுற்றுப்பயணம் எப்போது.. நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னென்ன?

Jul 04, 2025,10:32 AM IST

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. 



சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி குறித்து விஜய் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கிறார். மேலும், மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கிறார்கள். மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடுகிறார்.


செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டையும் அனுப்பப்பட்டுள்ளது.  காலை 11 மணியளவில் விஜய் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.




2026 சட்டசபை தேர்தல் வியூகங்கள், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி போன்ற விஷயங்கள் குறித்து விஜய் நிர்வாகிகளுடன் பேசுகிறார். "2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்கிறார்" என்பது முக்கிய அம்சம்.


தவெக சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தவும், மக்களின் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிடுகிறார். இந்த கூட்டத்திற்கு பிறகு தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்க உள்ளன.


மதுரை அருகே திருப்புவனத்தில் நடந்த அஜீத் குமார் மரணத்தைத் தொடர்ந்து அவரது இல்லத்திற்கு வருகை தந்து ஆறுதல் கூறியிருந்தார் விஜய். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் தொடர்ந்து பேசப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநில செயற்குழுக் கூட்டம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்