சென்னை: செயின் பறிப்பு செய்தவருக்கும் போலீசை அடித்தவருக்குமா தவெகவில் செயலாளர் பதவி என கேட்டு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கினார் நடிகரும் தவெக தலைவரும் ஆகிய விஜய். அதன்பின்னர் கட்சி பணிகள் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து வருகிறார். கடந்த அக்., 27ம் தேதி இவர் நடந்திய மாநாடு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும், தவெக கட்சியின் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. சமீபத்தில் தான் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து கட்சி தலைவர் விஜய் அறிவித்தார். நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார். கிட்டத்தட்ட 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அளவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தவெக தரப்பில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மீது அக்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது கன்னியாகுமரி மாவட்.டத்திலும் பிரச்சனை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக சபின் நியமிக்கப்பட்டுள்ளார். சபின் மீது தவெக நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேற்கு மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சபின் மீது ஒரு செயின் பறிப்பு வழக்கும், காவல்துறையினரை அடித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதே போல் சுயசாதிப்பற்று கொண்டவர் சபின். இவர் கன்னியாகுமரி மாவட்ட தவெகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது என்ற தவெக தலைவர் விஜய் அறிவிப்பு என்ன ஆனது? தவெக தலைவர் விஜய் சபின் மீது வைத்துள்ள நம்பிக்கை, கட்சியை அழிவு பாதையில் பயணிக்க வைக்கும். மாவட்டத்தில் கட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று எழுதப்பட்ட கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு அனுப்பியுள்ளார் மாவட்ட நிர்வாகி சிவா. அத்துடன் சபின் மீதான எஃப்ஐஆர் நகல்களையும் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளாராம்.
இந்தப் பஞ்சாயத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தவெக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}