திருநங்கைகள் அணி, சிறார் அணி, இளம் பெண்கள் அணி.. 28 அணிகளை உருவாக்கியது தமிழக வெற்றிக் கழகம்!

Feb 11, 2025,06:00 PM IST

சென்னை:  எந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு தவெகவில் சிறார் அணி, இளம் பெண்கள் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் அணி உட்பட 28 அணிகளை உருவாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.


கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கிய விஜய் 2025 பிப்ரவரி 2ம் தேதி முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடினார்.  இதற்காக அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அதே சமயத்தில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டு, சிலைகளையும் தவெக தலைவர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதி திறந்து வைத்தார். 




தற்போது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். கட்சி தொடங்கி ஒராண்டு ஆகியுள்ள நிலையில், சமீபத்தில் தான் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து அறிவித்துள்ளார். முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியான அறையில் ஆலோசனை நடத்தி, கட்சி நிா்வாகிகள், தொண்டா்களை நம்பித்தான் தவெகவை தொடங்கியுள்ளதாகவும், கட்சி வளா்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார். 


இந்நிலையில், எந்த கட்சியிலும் இல்லாத வகையில், பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார்கள் அணிகளை உருவாக்கியுள்ளார் தவெக தலைவர் விஜய். இவை தவிர தவெகவில் 3ம் பாலினத்தவர் மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணிகளும் உள்ளன. ஆக மொத்தத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 28 அணிகளை விஜய் உருவாக்கியுள்ளார்.  அதில், ஒன்பது அணிகள் குறித்த விபரத்தை  வெளியிட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட 9 அணிகளுக்கும் விரைவில் நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்