சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த வான் சகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட வான் சாகச கண்காட்சி நடைபெற்றது. இதற்காக கடந்த சில நாட்களாக விமானப்படையின் பல்வேறு வகையான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தமிழக அரசு சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விமான சாகச கண்காட்சியின் போது வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 240த்திற்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 93 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்ததற்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இந்திய விமானப்படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்பட செயல்படுத்துவதில், இனிவரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
{{comments.comment}}