கள்ளக்குறிச்சி: தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று வழங்கிட அனைத்து மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
{{comments.comment}}