வாக்குறுதி எண் 456.. கொடுத்தது யாரு.. திமுகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. விஜய் பேச்சு

Sep 27, 2025,06:12 PM IST

நாமக்கல்: சொன்னாங்களே சொஞ்சாங்களா? திமுகவிடம் ஜாக்கிரதையா இருங்க என்று நாமக்கல் பிரச்சாரத்தில் விஜய் பேசியுள்ளார்.


விஜய்யின் 3ம் கட்ட பிரச்சாரம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் புடைசூழ விஜய் பேசுகையில், 

சத்தான உணவான முட்டை கொடுக்கும் ஊர் மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணும் நாமக்கல் தான். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லுடா   என்பது நாமக்கல் மக்களுக்கு சரியாக இருக்கும். 


இந்த உணர்ச்சி மிக்க, நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர்  இதே ஊரில் பிறந்த ராமலிங்கம் பிள்ளை தான். தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும் அவர் தான். தமிழ்நாட்டிற்கு மண்ணிற்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்கியவர் நாமக்கலைச் சேர்ந்த சுப்பராயன். சுப்பராயனுக்கு மணி மண்டபம் கட்டுவோம் என 456ஆவது திமுக வாக்குறுதியாக கொடுத்தார்கள். சொன்னாங்களே செஞ்சாங்களா. 




அம்மா அம்மான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு பாஜகவுடன் பொருந்தாக் கூட்டணியை வைத்துள்ள அதிமுகவைப் போல நாங்கள் இருக்க மாட்டோம். நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னியைத் திருடியவர்களை தவெக ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிப்போம். கிட்னி திருட்டுக்கு முதற்காரணம் கந்து வட்டி கொடுமை. 


புதுசா சொல்லு புதுசா சொல்லுன்னா என்னத்த சொல்றது. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும். காற்றில் கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும். வீட்டுக்குள் விமானம் இயக்கப்படும் என அடித்து விடலாம். நம் முதல்வர் போல அடித்து விடலாமா வாக்குறுதிகளை. மக்களுக்குத் தேவையானதை தானே சொல்ல முடியும்.


இந்த பாசிச பாஜக அரசோடு நாங்கள் எப்போதும் ஒத்துப்போகவே மாட்டோம். குறிப்பாக திமுக போல பாஜகவோடு மறைமுக உறவுக்காரர்களாக இருக்க மாட்டோம். நீட்ட ஒழிச்சிட்டாங்களா? கல்வி நிதியை கொடுத்தாங்களா? அப்புறம் எதுக்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என நான் கேக்கல. புரட்சித் தலைவரின் உண்மையான தொண்டர்கள் கேக்குறாங்க. வரும் தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட்டால், அது பாஜவுக்கு ஓட்டுப் போட்டது மாதிரி. வெளியே அடித்துக்கொள்வது போல் அடித்துக்கொள்வார்கள். ஆனால் உள்ளே.. வேண்டாம் மக்களே யோசிங்க...


நண்பா... நண்பீஸ்... தோழா... தோழி... என்மேல இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா? என்னை இவ்வளவு நம்புகின்றீர்களா? சரி, ஒரு கை பார்த்துவிடலாம். நான்கூட ஓரிருவாரங்களுக்கு முன் என்னமோ ஏதோவென நினைத்தேன். ஆனால் பார்த்து விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்