மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது மதுரை பாரபத்தி...மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்

Aug 21, 2025,12:42 PM IST

மதுரை: தவெக மாநாட்டிற்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்து வருவதால், மதுரை பாரபத்தி மக்கள் வெள்ளத்தில் நிறம்பியுள்ளது. இதன் காரணமாக மாநாட்டு திடலுக்கு விஜய் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மிக பிரம்மாண்ட அளவில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள மாநாட்டிற்காக தற்போதே மாநாட்டு திடல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் எலியார்பத்தியில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி தற்போதே நிரம்பியது.


இன்னும் பல்வேறு வாகனங்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அணி அணியாக திரண்டு வந்துகொண்டுள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளதால் மதுரை பாரபத்தி பகுதியே ஸ்தம்பித்தது. அப்பகுதியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. மாநாட்டிற்கு வருபவர்களுக்காக அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


 


கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் உள்ளே நிறுத்தப்பட்டுள்ள லாரிகளுக்கு அடியிலும், ஒலிபெருக்கி, தண்ணீர் தொட்டி, மின்விளக்குகளுக்கு அடியிலும் தொண்டர்கள் ஒதுங்கி வருகின்றனர். இதனையடுத்து, தவெக மாநாடு பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், ராட்சத டிரோன் மூலமாக மாநாடு திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆங்காங்க உணவுகள் சமைக்கப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை தவெக மாநாட்டுத் திடலில், அவரச மருத்துவ உதவிக்காக  ட்ரோன்களில் முதலுதவி பெட்டிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.


மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின் விஜய்யின் பேச்சு தொடங்கும் என்றும் இன்றைய மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிரும் மதுரை... மக்கள் வெள்ளத்தில் விஜய்.. தொடங்கியது தவெக 2வது மாநில மாநாடு!

news

100 அடி இல்லங்க... 40 அடி உயர கொடி கம்பம்... கொடி ஏற்றுகிறார் தவெக விஜய்!

news

மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

news

மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது மதுரை பாரபத்தி...மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்

news

Madurai TVK Maanadu: தவெக மாநாட்டில் விஜய் செய்ய இருக்கும் தரமான சம்பவம்!

news

12 நாட்கள் சரிவிற்கு பின்னர்.... இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 உயர்வு!

news

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு

news

Vinayakar Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது.. அதன் சிறப்புகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்