ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம் எல் ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் அத்தொகுதி காலியானது. தொடர்ந்து பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டு, இன்றுடன் வேப்பமனு தாக்கல் நிறைவடைகிறது.
பொங்கல் விடுமுறை முடிந்து இன்று கடைசி நாள் என்பதால் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.அதேபோல் தமிழர் கட்சி சார்பில் எம்.கே.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். பாஜக, அதிமுக, தேமுதிக, ஆகிய முக்கிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகமும் நடந்து முடிந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை போலவே பிப்ரவரி ஐந்தாம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வெற்றிக்கழக தலைவர் அவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியிட்ட கட்சி தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளை பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொது தேர்தல்களை காட்டிலும் ஜனநாயகத்திற்கு எதிராக பல மடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாற்று நமக்கு உணர்த்துகிறது.
அதன் அடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதை கழகத் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}