சென்னை : சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி, நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்கள், பொது மக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்புப் பிரிவில் டாக்டராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவர் நோயாளியை மோசமான வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர், டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த டாக்டர் பாலாஜி, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

டாக்டர் பாலாஜி பட்டபகலில் கத்தியால் குத்தி தாக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து போஸ்ட் ஒன்று பதிவிட்டுள்ளார். விஜய் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.
சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு விஜய் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}