புதுச்சேரி : புதுச்சேரியில் ரோடுஷோ நடத்த விஜய் திட்டமிட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. இதில் தவெகவின் மாஸ்டர் பிளான் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது.
2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி வரை தமிழகத்தின் வருவாய் மாவட்டங்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வேனில் சென்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் தவெக கட்சி தலைவர் விஜய். அதன் படி செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் முதல் கட்டமாக தனது பிரச்சார பயணத்தை துவக்கினார். தொடர்ந்து பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார்.
செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதற்கு பிறகு அடுத்தடுத்த வழக்குகள் தவெக நிர்வாகிகள் மீது போடப்பட்டு, தற்போது இந்த வழக்கு சிபிஐ.,யின் விசாரணையில் உள்ளது. இதற்கிடையில் சேலத்தில் பிரச்சார பயணத்தை துவக்க தவெக சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அனுமதி தர போலீசார் மறுத்து விட்டனர். இதற்கிடையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கான நிலையான ஒழுங்குமுறை விதிகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளும் சாலையில் பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது என தமிழக அரசும் அறிவித்து விட்டது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரியில் விஜய் ரோடுஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்டு அந்த மாநில டிஜிபி.,யிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் தான் விஜய்யும் அவரது கட்சியும் போட்டியிட போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தால், புதுச்சேரியில் எதற்காக ரோடுஷோ நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள் என குழப்பமும், கேள்வியும் பலருக்கும் எழுந்திருக்கும். ஆனால் இது தான் விஜய்யின் மாஸ்டர் பிளானாம்.
தமிழகத்தை போல் புதுச்சேரிக்கும் 2026ல் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 10 லட்சம் தான். இதனால் அங்கு புஸ்ஸி ஆனந்த்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி, ஆட்சியை பிடிக்கலாம் திட்டமிட்டிருக்கிறாராம் விஜய். புஸி ஆனந்த், ஏற்கனவே புதுச்சேரி எம்எல்ஏ.,வாக இருந்தவர் என்ற முறையில் அவருக்கு அந்த மாநிலத்தை பற்றியும், தொகுதிகளை பற்றியும், மக்களை பற்றியும் நன்கு தெரியும். மற்றொரு புறம் ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனரான சார்ல்ஸ் மார்டின் வேறு டிசம்பரில் புதுக்கட்சி துவக்க போவதாக அறிவித்துள்ளார். இதனால் தனது மைத்துனருக்கு எதிராக களமிறங்கி, அதிகாரத்தை கைப்பற்ற ஆதவ் அர்ஜூனா திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் சற்று ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஒரு விஷயத்தை உற்று நோக்குகிறது தமிழ்நாடு அரசியல் வட்டாரம். அதாவது புதுச்சேரியில் தற்போது முதல்வராக இருப்பவர் விஜய்யின் மிகத் தீவிரமான ரசிகரான ரங்கசாமி. விஜய்யுடன் வருகிற சட்டசபைத் தேர்தலில் கை கோர்த்துக் களம் இறங்கவும் திட்டமிட்டு வருகிறார் ரங்கசாமி. எனவே புதுச்சேரியில் மாஸான முறையில் விஜய்யை வைத்து ஒரு ரோடுஷோ நடத்த தவெக திட்டமிட்டதன் பின்னணியில் ரங்கசாமியும் இருப்பதாக சொல்கிறார்கள்.
அதேபோல, புதுச்சேரியில் சிறப்பான முறையில் பலத்த பாதுகாப்புடன் ரோடுஷோவை வெற்றிகரமாக நடத்தி விட்டால், அதை வைத்து, பார்த்தீர்களா.. புதுச்சேரி அரசு சிறப்பான முறையில் பாதுகாப்பு கொடுத்ததால் எங்களது ரோடுஷோ மிகப் பெரிய கூட்டம் கூடியும் கூட பிரச்சினை இல்லாமல் முடிந்தது. இதேபோன்ற பாதுகாப்பை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை. அதனால்தான் கரூர் சம்பவம் நடந்தது என்று திமுகவை விமர்சிக்க தவெகவுக்கு ஒரு காரணத்தைத் தேடவும் இந்த ரோடு ஷோவைப் பயன்படுத்தலாம் என்று தவெக நினைப்பதாகவும் சொல்கிறார்கள்.
எது உண்மையோ தெரியவில்லை.. ஆனால் விஜய் ரோடுஷோ பெரும் எதிர்பார்ப்பைுயம், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?
நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் உயர்வு... சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சஷ்டி & திருவோணம் நட்சத்திரம் சேர்ந்த சுப தினம் இன்று!
வங்கக் கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழ்நாட்டுக்கு மழை எப்படி இருக்கும்?
எனை வார்த்தெடுத்த என் பள்ளிக்கூடமே!
கிங்கினி நாதம் கல்கல் என ஒலித்திட கண்ணன் நடந்திடுவான்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 26, 2025... இன்று நினைத்தது கைகூட போகும் ராசிகள்
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
{{comments.comment}}