சென்னை: பத்து மற்றும் பன்னிரண்டாம் பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, விரைவில் அவர்களை சந்திக்க உள்ளதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் நாள் தேதி நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் இன்று வெளியானது. இந்த பொது தேர்வில் 8,18,743 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து இன்று புதுச்சேரியிலும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மே மாதம் 6ஆம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது. இதில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதிலும் மாணவர்களை மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட, இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான நடிகர் விஜய் கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வில் பல்வேறு துறைகளில் வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூதாயத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறி விரைவில் சந்திப்போம் என கூறியுள்ளார்.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களையும் ஜூன் மாதத்தில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை மாணவ மாணவியரை விஜய் சந்தித்த நிகழ்வு நீண்ட நாட்கள் பேசப்பட்டது. அப்போது அவர் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் இப்போது அரசியல் தலைவராகவும் அவர் மாறியுள்ள நிலையில் நடைபெறப்போகும் இந்த சந்திப்பு மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}