சென்னை : நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், அதிமுக மற்றும் திமுக.,வின் முன்னாள் எம்எல்ஏ.,க்கள் தனது கட்சியில் இருந்துள்ளார்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் இன்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள் ஆர்.ராஜலட்சுமி, மற்றும் டாக்டர் ஏ.ஸ்ரீதரன், திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர்களில் ராஜலட்சுமி, சென்னை மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர். இவர் அதிமுக.,வில் இருந்து விலகி பாஜக.,விற்கு சென்று, பிறகு மீண்டும் அதிமுக.,வில் இணைந்தவர். அதே போல் டேவிட் செல்வன் என்பவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர்.

வழக்கமாக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவார்கள். ஆனால் பெரிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள், புதிதாக துவங்கப்பட்ட விஜய் கட்சியில் இருந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி பேசி வரும் நிலையில் விஜய் எதற்காக அதிமுக-திமுக நிர்வாகிகள் தங்கள் கட்சியின் இணைந்துள்ளதை இப்போது வெளிப்படுத்தி உள்ளார்? இதன் மூலம் அதிமுக-திமுக இரண்டு கட்சிகளுமே தங்களின் எதிரி என்பதை பகிரங்கபடுத்த நினைக்கிறாரா அல்லது அதிமுக-தவெக-பாஜக கூட்டணி அமைய உள்ளதாக பரபரப்பான பேச்சுக்கள் உலா வருவதால் அவற்றிற்கு முடிவு கட்டுவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக இருவரும் தங்களின் எதிரிகள் என ஏற்கனவே பொதுக் கூட்டத்திலேயே விஜய் அறிவித்து விட்டார். இருந்தாலும் அதிமுக.,வை எதிர்க்காததால் அவர்களுடன் கூட்டணி வைக்க விஜய் நினைத்துள்ளார் என சொல்லப்பட்டது. இப்போது அதிமுக.,வும் பாஜக கூட்டணியில் இணைந்து விட்டது. ஆனால் பாஜக.,வை சேர்ந்த நிர்வாகிகள் பலர், பாஜக., உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என விஜய் எங்கும் சொல்லவில்லையே என நம்பிக்கையுடன் பேசி வருகிறார்கள்.
ஒருவேளை திமுக., உடன் தான் கூட்டணி இல்லை என்றால் அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ., இணைந்தது மட்டும் அறிவித்திருக்கலாம். அப்படி செய்தால் அதிமுக., உடன் கூட்டணி அமைக்க விஜய் விருப்பமாக உள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு கட்சிகளையும் எதிரிகள் என்பது போல் காட்டிக் கொண்டுள்ளார் தனித்துப் போட்டி அல்லது தனது தலைமையில் புதிய கூட்டணி என்பதில் விஜய் உறுதியாக உள்ளார் என்பதையே இது காட்டுகிறது.
ஆக மொத்தம் திமுக, அதிமுக முகாம்களை நேரடியாக சீண்டி தனது கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தையும், எதிர்த் தரப்புக்கு பெரும் எரிச்சலையும் கொடுத்துள்ளார் விஜய்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}