சென்னை: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்பது அழைப்பிதழில் இருந்து தெரியவந்துள்ளது.
டிசம்பர் 6ம் தேதி ஆதவ் அர்ஜூனா எழுதிய அம்பேத்கர் குறித்த புத்தகத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிடுகிறார் என்றும், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்னர் தீயாக பரவி வந்தது. ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமாவளவனும் பங்கேற்க உள்ளதால், இருவரும் வருகின்ற 2026ம் தேர்தலில் கூட்டணி வைப்பதற்கான அச்சாரம் தான் இந்த புத்தக வெளியீட்டு விழா என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த செய்திக்கு திருமாவளவன் பல முறை மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த விழாவில் கலந்து கொள்ள வில்லை என்பது இந்த விழாவின் அழைப்பிதலில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆதவ் அர்ஜூனா தொகுத்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்பு உரையாற்ற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விகடன் பிரசுரம் வெளியிடும் இந்த புத்தகம் டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. மேலும் இந்த விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் உள்ளிட்ட சிலர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}