கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு சென்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், அங்கு கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து 38 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யும் இன்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்து வந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார். டாக்டர்களிடமும் அவர்களது நிலை குறித்துக் கேட்டறிந்தார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். விஜய்யைப் பார்த்து கதறி அழுத பெண்ணை கட்டி அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அரசின் நிர்வாக கவனக்குறைவே இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் கண்டித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}