களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!

Aug 19, 2025,04:42 PM IST

மதுரை: நாளை மறுநாள் தவெக 2வது மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.


தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கட்சியை ஆரம்பித்தார். அதன்பின்னர் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்ட அளவில் நடத்தினார். இதற்கு அடுத்த படியாக தவெக கட்சியின்  2வது மாநில மாநாட்டை மதுரையில் நாளை மறுநாள் நடத்த உள்ளார் விஜய். இந்த மாநாட்டை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.


மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு, அங்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு 21-ந்தேதி பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.




இந்த நிலையில், நாளை மறுநாள் தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக தற்போது மதுரை வந்தடைந்துள்ளார். மாநாட்டு பணிகள் குறித்து இன்று மாலையில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இன்று முதல் மாநாடு நிறைவு பெறும் வரை விஜய் மதுரையில் தான் இருப்பார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்