சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தவெக-வின் வியூகம் :
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, வரவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "சென்னையில் உள்ள மொத்தம் 16 சட்டமன்றத் தொகுதிகளில், குறைந்தபட்சம் 13 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். இதற்கான களப்பணிகள் ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார். தலைநகர் சென்னையில் நிலவும் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை மற்றும் இளைஞர்களின் பேராதரவு தவெக-விற்கு சாதகமாக அமையும் என்பது அக்கட்சியின் கணக்காக உள்ளது.
வேட்புமனுத் தாக்கல் :

கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், வேட்பாளர்கள் தேர்வு மற்றும் மனுத் தாக்கல் குறித்த முக்கியத் தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
தவெக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30-ஆம் தேதி அன்று தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான விரிவான வழிகாட்டுதல்களைக் கட்சித் தலைமை மாவட்ட வாரியாக வழங்கியுள்ளது. கட்சியின் முதல் தேர்தல் என்பதால், மிகவும் கவனமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் களத்தில் ஏற்படும் தாக்கம்:
தமிழக வெற்றிக் கழகம் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மற்ற திராவிடக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளிடையே ஒருவிதப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது திமுக.,வின் கோட்டையாக இருக்கக் கூடிய சென்னையில் உள்ள 13 தொகுதிகளை தவெக கைப்பற்றும் என ஆதவ் அர்ஜூனா நம்பிக்கையுடன் தெரிவித்திருப்பது மற்ற கட்சியினரை கலக்கம் அடைய வைத்தாலும், தவெக தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}