கடைசில இந்த பாட்டியையும் "காவாலா" பாட வச்சிட்டீங்களாய்யா!!

Jul 18, 2023,03:48 PM IST
சென்னை: இந்தப் பாட்டியை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. டிரெண்டிங்கில் எந்த சினிமா பாட்டு வந்தாலும் சரி, பாட்டி சளைக்காமல் ஒரு ரீல் போட்டு விடுவார். அந்த வகையில் இப்போது காவாலா பாட்டையும் பாட்டியை வைத்து ரீல் போட்டு கலக்கியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் என எங்கு பார்த்தாலும் இந்தப் பாட்டி பிரபலமானவர். அதிரடி பாட்டுக்களையும் அட்டகாசமாக மூவ்மென்ட் கொடுத்து கலக்கக் கூடியவர். ஆட மாட்டார். மாறாக கை,  உடல் மொழி மற்றும் முக அசைவுகளால் கட்டி போட்டு விடுவார் நம்மை.



அழகான சிரிப்பும், கண்களில் பாவனை, பாடல்களின் பீட்டுக்கேற்ப மூவ்மென்ட் என யூத்துகளுக்கு டஃப் கொடுக்கும் இந்தப் பாட்டி பாடாத...ஸாரி வாயசைக்காத பாட்டுக்களே இல்லை என்று சொல்லலாம். பாடல்கள் மட்டும்தான் என்று இல்லை, வசனங்களுக்கு கூட இவர் சூப்பராக நடித்துள்ளார்.

இப்போது தமன்னா ஆடிப் பாடிய ஜெயிலர் படப் பாடலான காவாலா பாட்டுக்கு மூவ்மென்ட் கொடுத்து கலக்கியுள்ளார் பாட்டி. சும்மா சொல்லக் கூடாது.. செமையாக இருக்கிறது. ஒரிஜினலாக ஆடிய தமன்னாவே இதைப் பார்த்து தி பெஸ்ட் என்று பாராட்டித் தள்ளியுள்ளார் என்றால் பாருங்களேன்.

ஒரு ரஜினி பட பாட்டு நடிகைக்காக பிரபலமானது என்றால் அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கக் கூடும். அந்த அளவுக்கு காவாலா பாட்டுககாக தமன்னா வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார். அவரைப் போலவே ஆடி பலரும் ரீல்ஸ் போட்டு தமன்னாவை டிவிட்டரில் டேக் செய்து வருகின்றனர். அவரும் அவர்களைப் பாராட்டி வருகிறார். 

இப்போது பாட்டிக்கும் தமன்னா வாயால் பாராட்டு கிடைத்து விட்டது.. இனி பாட்டியைக் கையில் பிடிக்க முடியாது!

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்