சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் முரளிதரன் ஆகிய இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் பிறந்த செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மாநில அளவிலும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த விருதுக்காக இந்திய முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்க உள்ளார். இந்த விருதுக்கு தேர்வானவர்களுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். அத்துடன் ரூ.50,000த்திற்கான காசோலையும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள்.
விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் தனது எக்ஸ் தள பக்கத்திலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், வேலூர் மாவட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கோபிநாத் அவர்களும், மதுரை டி.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் அவர்களும் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றார்கள்.
இவ்விரு ஆசிரியப் பெருமக்களுக்கும் tnschoolsedu சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}