வேலூர்: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, நான் சினிமா நியூஸ் பார்ப்பதில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்று அறிவித்தார். இது விவாதப் பொருளாக மாறியது.
இப்படி பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. விஜ்ய கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். விழாவில் விஜய் பேசுகையில், திமுகவை நேரடியாகவேத் தாக்கிப் பேசினார். மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026 தேர்தலில் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என பேசியிருந்தார்.

ஏற்கனவே தவெக கட்சியின் மாநில மாநாட்டில் விஜய் திமுக குறித்த பேசிய பேச்சுக்கள் தற்போது வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் எழுந்து வரும் நிலையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் நேற்று விஜய் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேச்சுக்களுக்கு தற்போது திமுக அமைச்சர்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவித்து பதில் அளித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்பாடியில் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பிறப்பால் யாரும் முதல்வராக கூடாது என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து கேட்டபோது, மக்களால் தேர்வு செய்யப்பட்டு தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. யாருங்க பிறப்பால் முதல்வர்..? மக்களால் தேர்வு செய்ததால்தான் முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் என்றார்.
தொடர்ந்து விஜய் குறித்த இன்னொரு கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது, நான் சினிமா நியூஸ் பார்ப்பதில்லை என ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு சென்றார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}