சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், ஆளுங்கட்சி அரசியல் ஆதாயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையைக் குறிப்பிட்டு அவர் இக்கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த புதர்மறைவில் வீசப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த கொடூர சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. வட மாநில தொழிலாளி ஒருவரின் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்."
ஆளுங்கட்சியின் தற்போதைய அரசியல் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி சாடிய அவர், "அடுத்த கட்சி ஆட்களை Purchase (விலைக்கு வாங்கும்) செய்யும் நேரத்தில், கொஞ்சமாவது சட்டம் ஒழுங்கை protect (பாதுகாக்க) செய்ய முதலமைச்சர் அக்கறை காட்ட வேண்டும்" என்று மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், ஆளுங்கட்சி பிற கட்சித் தலைவர்களைத் தன்வசம் இழுப்பதிலேயே குறியாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உடனடியாகத் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}