சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தில் துணை முதல்வராக நியமிக்கவும், அமைச்சரவையில் புதிதாக 4 அமைச்சர்களை சேர்க்கவும், அமைச்சர்கள் சிலவரின் இலாக்காக்களை மாற்றவும் பரிந்துரை செய்து கவர்னர் மாளிகைக்கு தமிழக அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் வர உள்ளதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வராக்கப்பட உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வந்தது. ஆனாலும் திமுக சார்பில் அவற்றை சூசகமாக மறுத்து வந்தனர். சமீபத்தில் இது பற்றி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடமே கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் அமைச்சரவை மாற்றம் இருக்கும். ஆனால் ஏமாற்றம் இருக்காது என தெரிவித்தார். இதன் மூலம் அமைச்சரவை மாற்ற தகவல் உறுதியானது. எப்போது இது பற்றிய அறிவிப்பு வரும் என அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழக கவர்னருக்கு அரசு சார்பில் இன்று பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலினுக்கும், புதிய அமைச்சர்களுக்கும் ஆளுநர் நாளை பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்கவும், மேலும் செந்தில் பாலாஜி, டாக்டர் கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை தமிழக அமைச்சர்களாக சேர்க்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாளை (செப்டம்பர் 29) மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர தற்போது அமைச்சர்களாக உள்ள மனோ தங்கராஜ், செஞ்சி கே எஸ் மஸ்தான் மற்றும் க ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர ஆறு அமைச்சர்களின் இலாஹாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன் படி இலாகா மாறும் அமைச்சர்கள் விபரம்
1. பொன்முடி - உயர்கல்வி துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்படுகிறார்.
2.மெய்யநாதன் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறையில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்படுகிறார்.
3.கயல்விழி - ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து மனிதவள மேம்பாட்டு துறைக்கு மாற்றப்படுகிறார்.
4. மதிவாணன் - வனத்துறையிலிருந்து ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றப்படுகிறார்.
5.ராஜகண்ணப்பன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிலிருந்து பால் வளத்துறைக்கு மாற்றப்படுகிறார்.
6.தங்கம் தென்னரசு - நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து நிதித்துறையுடன் கூடுதல் பொறுப்பாக சுற்றுச்சூழல் துறையை கவனிக்க உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}