-கவிஞர் க.முருகேஸ்வரி
பாரதிராஜா.......
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்.... காதல் திரைப்படங்களை காவியமாக்கிக் கொடுப்பவர். அப்படி ஒரு திரைப்படம் தான் கடலோரக் கவிதைகள்.
இந்தத் திரைப்படத்தைப் பார்த்து ஜெனிபர் டீச்சராகவே தன்னை நினைத்துக் கொள்ளாத பெண்களும் உண்டா?
அதிலும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் சொல்லவே வேண்டாம்......(ரேகாவாகவே மாறி குடையைச் சுழற்றியது..,... காட்டன் புடவையில் கலக்கியது.......)
அதில் வரும் ஒரு காட்சி... எனக்கு மிகவும் பிடித்த காட்சி..... உங்களுடன் மீண்டும் எழுத்துக்களால் அந்த நினைவுகளை மீட்டெடுக்கிறேன்.....

தாஸ், அவள் வீட்டில் கையில் ஆட்டுக்குட்டியுடன் இருக்கும் இயேசு வின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பான்.
ஜெனிபர் டீச்சர், என்ன தாஸ் அப்படி பார்க்குறீஙகனு கேட்பாள். ஏன் டீச்சர் அவருக்கு நம்மள மாதிரி படிப்பு வராதா??? ஆடு மேய்க்கிறார் என்று கேட்பான் தாஸ். அதற்கு ஜெனி... அது வழி தவறிய ஆடு ...அதற்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவருக்கு Good shepherd என்ற பெயரும் உண்டு என்பாள்.
அப்படியென்றால் என்ன என்று கேட்கும் தாஸிடம்... நல்ல மேய்ப்பாளர் என்று கூறுவாள். அப்ப நான் சொன்னது சரிதான் என்று தாஸ் சொல்ல..... ஜெனி, தாஸிடம்....ஏன் தாஸ் உன்கிட்ட ஒரு ஆடு வழி தவறி வந்தா என்ன செய்வ? என்று கேட்பாள்.
அதற்கு தாஸ், பிரியாணி தான்.....பட்ட கிராம்பு எல்லாம் போட்டு அசத்திட மாட்டேன் என்பான். அதற்கு ஜெனி..... அது ஜெனியா இருந்தா????? அந்த ஆடு நானா இருந்தா???? என கேட்பாள்....
அப்புறம் என்ன.. தாஸ் அவளைப் பார்க்க.. ஜெனி தாஸைப் பார்க்க.. அடி ஆத்தாடி என்ற பாடல் ஒலிக்க
அருமையான காட்சி.. நான் ரசித்த காட்சி!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி
திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
வெங்கிரணங்களால் உலகோரை.. ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான் சூரியன்!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு...10 பேர் பட்டியலில் செங்கோட்டையன்
பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?
பாலமேடு ஜல்லிக்கட்டு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை பரிசளித்த நடிகர் சூரி!
மாட்டுப் பொங்கலோடு திருவள்ளுவர் தினத்தையும் சேர்த்துக் கொண்டாடுவோம்!
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தங்கம் விலை இன்று சற்று குறைவு
அடி ஆத்தாடி.. மனதைக் கொள்ளை கொண்ட ஜெனீபர் டீச்சர் .. A rewind!
சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
{{comments.comment}}