சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து சென்னையில் அவரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் இரண்டாவது அமர்வு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக எம்பிக்கள் தமிழகத்திற்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் அமளி துமளி ஏற்பட்டது. திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. மத்திய கல்வி அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை கூறி தவறாக வழி நடத்துகிறார். தமிழ்நாட்டிற்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்க பார்க்கிறது. தமிழகத்திற்கு நிதி தராதது பழிவாங்கும் செயல் இது. பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியிருக்கிறார் என காட்டமாக பேசினார்.

இதற்கு பதில் அளித்த தர்மேந்திர பிரதான் பாஜக ஆளாத மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாட்டு மாணவர்களை தவறாக வழி நடத்தி செல்கிறது திமுக அரசு. பி எம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூடன் போட்டது. தமிழக எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு எம்பிக்கள் அநாகரிகமற்றவர்கள் என்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை திரும்ப பெற்றார் .இருப்பினும் திமுக எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி, தங்கப்பாண்டியன், சசிகாந்த், அமைச்சர் பொன்முடி, திருச்சி என்.சிவா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதே சமயத்தில் தமிழகத்திற்கு நிதியை தராமல் ஏமாற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்பிக்களை பார்த்து அநாகரிகமானவர்கள் என ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும் என கடுமையாக சாடி முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கடும் கண்டன ஆ,ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு தமிழக முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?
{{comments.comment}}